திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன்!

Weekly Horoscope: மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம். இந்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது, அதன் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்படும்...

1 /14

மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான முழு வாரத்திற்குமான வார ராசிபலன் அறிவோம்...

2 /14

தன்னம்பிக்கை பிறக்கும். கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதன் பெயர்ச்சியால் அரசு காரியங்களில் ஆதரவு கிடைக்கும், மாணவர்களுக்கு உகந்த வாரம் இது  

3 /14

குடும்பத்தில் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தெளிவும், புத்துணர்ச்சியும் கொடுக்க செவ்வாய் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. சகோதர்களின் ஆதரவால் மனம் மகிழ்ச்சி அடையலாம். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும், யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்

4 /14

வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிட்டும், குடும்பத்தில் இருந்து வெளியில் இருப்பவர்கள், குடும்பத்துடன் வந்து சேர்வார்கள். மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும் செயல்கள் நடைபெற்றாலும் குடும்பத்தினரின் ஆதரவு நிம்மதியைக் கொடுக்கும்

5 /14

சேமிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது புரியும். முன்னேற்றம் காணவேண்டும் என்றால், உழைக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். எண்ணங்கள் ஈடேறுவதற்கு திட்டமிடல் அவசியம் என்பதும் புரியும் 

6 /14

அனுசரித்துச் சென்றால் நிம்மதி நிலைக்கும் என்பதை நிதர்சனமாக உணர்வீர்கள். வாக்கு சாதுரியம் கைகொடுக்கும். உழைப்பும் நேர்மையும் இருந்தால் என்றும் வெற்றி கிட்டும் என்பதை புரிந்துக் கொள்ளக்கூடிய வாரம் இது

7 /14

காரியங்களில் வெற்றி கிடைக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது என்பதை உணர்த்தும் செவ்வாய் சஞ்சாரம், இந்த வாரத்தில் நடைபெறவிருக்கிறது. செவ்வாயின் ராசி மாற்றத்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்

8 /14

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் உண்டாகும், பதவி உயர்வு மற்றும் எண்ணத்தில் தெளிவு வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டால் எண்ணங்கள் ஈடேறும்

9 /14

வெளி வட்டாரத்தில் பெயர் பிரபலமாகும் அளவுக்கு தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கு உகந்த நேரம் இது. புதன் பெயர்ச்சியால் புதிய துறை சார்ந்த தேடல்கள் தொடர்பான எண்ணங்கள் உருவாகும்

10 /14

படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும், செலவுகளை குறைத்தால் தான் நிம்மதி கிடைக்கும் என்பதை உணரும் சந்தர்ப்பங்கள் வரும். அலங்கார பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தொழில் மற்றும் பணியில் எப்படி சாதுரியமாக செயல்படுவது என்பதை அறிந்துக் கொள்வீர்கள் 

11 /14

அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் உருவாகும். இந்த வாரம் அமைதியாக இருப்பது நல்லது. விவாதங்களில் இருந்து விலகியிருக்கவும். வாயைக் கட்டுப்படுத்தினால் நிம்மதி உங்களுக்கு வாய்க்கும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மனதில் சோர்வு ஏற்படும்.  

12 /14

பயணங்களின் மூலம் பல்வேறுதரப்பட்ட அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்

13 /14

மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் வாரமாக இருக்கும். புதன் பெயர்ச்சியால் புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது