January Travel Destinations:2022 ஜனவரி மாதத்தில் பயணம் செய்யும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படி நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு மிக அற்புதமான அனுபவங்களைத் தரக்கூடிய பல நல்ல இடங்கள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக, புதுமண தம்பதிகளுக்கு இவை பயணம் மேற்கொள்ள மிக நல்ல இடங்களாக இருக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அழகான உப்பங்கழிக்கு பெயர் பெற்ற அலப்புழா, ஜனவரியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் அழகிய கடற்கரைகள், கோவில்கள் மற்றும் பாரம்பரிய படகுப் போட்டிகளுக்கு பெயர் பெற்றது.
அவுலி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலமாகும். இது நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. நந்தா தேவி, கெர்சன் புக்யால், குவாரி புக்யால், செனாப் ஏரி மற்றும் ஜோஷிமட் ஆகியவை இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள். இங்கே நீங்கள் பனிச்சறுக்கு மற்றும் மலையேற்றத்தை அனுபவிக்க முடியும்.
கர்வால் இமயமலைத் தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள முசோரி 'மலைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. லால் திப்பா, லேக் மிஸ்ட், கெம்ப்டி ஃபால்ஸ், கன் ஹில் மற்றும் நாக் திப்பா போன்ற இடங்கள் இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமானவை. நீங்கள் இங்கு பாராகிளைடிங் மற்றும் ட்ரெக்கிங் செய்யலாம்.
ரான் ஆஃப் கட்ச் ஜனவரியில் பார்க்க ஏற்றது. ரன் ஆஃப் கட்ச் இந்தியாவின் வெப்பமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாராமோட்டரிங், தியானம், ரைபிள் ஷூட்டிங், ஸ்டார் வாட்ச், ஜங்கிள் சஃபாரி மற்றும் பர்ட் வாட்சிங் போன்றவற்றை இங்கு நீங்கள் அனுபவிக்க முடியும். ரான் ஆஃப் கட்ச், கலோ துங்கர், கட்ச் புதைபடிவ பூங்கா மற்றும் மாண்ட்வி கடற்கரை ஆகியவை இங்கு சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக உள்ள இடங்களாகும்.
சிக்கிமில், நீங்கள் சோமோ ஏரி, நாதுலா கணவாய், காஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, யும்தாங் பள்ளத்தாக்கு மற்றும் பசுமை ஏரி போன்ற இடங்களுக்குச் செல்லலாம். இங்கு மலையேற்றம், பைக்கிங் மற்றும் சாகச விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்பது உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.