LDL கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்: தினமும் சாப்பிடுங்க

Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? இதை இயற்கையான வழியில் குறைக்க வேண்டுமா? அதற்கான வழிகளை இங்கே காணலாம்.

Cholesterol Control Tips:  இதய ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க, நரம்புகள் வழியாக ஓடும் இரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் உடல் முழுவதும் சீராக ஓடுவது முக்கியமாகும். ஆனால் கொலஸ்ட்ரால் அதிகமாவதால், தமனிகளால் இதைச் செய்ய முடியாமல் போதுமான இரத்தம் கிடைக்காமல் இதய நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன. தினசரி டயட்டில் சில உணவுகளை சேர்ப்பதன் மூலம் தமனிகளில் குவிந்துள்ள அழுக்குகளை முழுமையாக சுத்தம் செய்யலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில முக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /9

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க நாம் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

2 /9

சில எளிய இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /9

மீன்கள் மற்றும் முட்டைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தில் ட்ரைக்ளிசரைட்ஸ்களை குறைக்க உதவுகின்றன. கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ள நபர்கள் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4 /9

கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்கள் முழு தானியங்களை உட்கொள்வது நல்லது. இவற்றில் நார்ச்சத்தும், பிற புரதச்சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. இதன் காரணமாக கெட்ட கொழுப்பு கட்டுக்குள் இருப்பதோடு இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

5 /9

ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிரீன் டீ குடிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இதில் பல வித மருத்துவ குணங்கள் இருப்பதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

6 /9

மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும். மஞ்சளை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம்.   

7 /9

பூண்டில் அலிசின் என்ற கலவை உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. பூண்டு உணவிற்கு சுவையை சேர்ப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது கெட்ட கொழுப்பை வேகமாக்க குறைக்க உதவும். இது செரிமான அமைப்பையும் சீர் செய்கிறது.

8 /9

இவை தவிர ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை, தேவையான அளவு உடற்பயிற்சிகள், நல்ல தூக்கம் ஆகியவையும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க மிகவும் அவசியமாகும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.