பற்களை உறுதிப்படுத்தும் கிச்சன் கில்லாடி மசாலாக்கள்! எதை எப்போது பயன்படுத்தலாம்?

Toothache Remedies: வலிகளில் எந்த வலி கொடுமையானது என்று கேட்டால், அது வலிப்பவரின் சகிப்புத்தன்மையை பொறுத்ததாக இருக்கும். ஆனால் பல் வலி இருந்தால் சொல்லும் சொல்லும் கடுமையாகும், உணவு உண்பதிலும் பிரச்சனை தான்

பல்வலியால் நாம் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, பல்வலியைப் போன்ற மோசமான வலி எதுவும் இல்லை என்று சொல்வோம். ஆனால், மோசமான வலியையும் விரைவில் குணமாக்கும் சில மசாலாப் பொருட்களை எப்போது எப்படி பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்வோம்

1 /11

பல்வலியால் நாம் அடிக்கடி சிரமப்படுகிறோம். மீண்டும் மீண்டும் பல் மருத்துவரிடம் சென்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகிறது.

2 /11

பல்வலிக்கு சிகிச்சையளிக்க, சமையலறையில் வைத்திருக்கும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இந்த மசாலாப் பொருட்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்-

3 /11

நமது அழகை கூட்டுவதும் குறைப்பதும் பற்களின் அமைப்பு என்றால், பல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது முகத்தில் சிரிப்பும் இயல்பாக இருக்கும். 

4 /11

சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி பல்வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இந்த மசாலாப் பொருட்கள் உங்கள் சமையலறையில் எளிதாகக் கிடைக்கக்கூடியவை

5 /11

பல்வலி மற்றும் பற்சிதைவு பிரச்சனைகளில் இருந்து விடுபட பூண்டு சிறந்த மருந்தாக செயல்படும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் பூண்டு, வலி நிவாரணியாக செயல்படுகிறது. வெந்நீரில் பூண்டு தட்டி போட்டு தேநீராக உட்கொள்ளலாம் அல்லது பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து வலியால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். இதனால் வலியில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும்.

6 /11

பல்வலிக்கு சமையலறைஅஞ்சறைப்பெட்டியில் உள்ள மசாலாக்களே அருமருந்தாகும்

7 /11

கிராம்புகளின் உதவியுடன், பல்வலி பிரச்சனையை குறைக்கலாம். கிராம்புகளில் ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை பல்வலியைக் குறைக்கும். ஈறுகளைச் சுற்றியுள்ள வீக்கத்தையும் குறைக்கும் கிராம்பை பற்களில் சிறிது நேரம் வைத்து அதன் சாறை பருக வேண்டும். கிராம்பு தேநீர் அருந்துவதும் ஆரோக்கியமாக இருக்கும்.

8 /11

பல் சொத்தை மற்றும் வலியைக் குறைக்க பெருங்காயம் பயன்படுத்தவும். இதிலுள்ள மருத்துவ குணங்கள் பல் வலியைக் குறைக்கும். பெருங்காயத்தில் சிறிது தண்ணீர் கலக்கவும். அதன் பிறகு, இந்த பேஸ்ட்டை வலி உள்ள இடத்தில் தடவவும். இதன் மூலம் பல்வலி குறையும்.

9 /11

பல்வலி பிரச்சனையை குறைக்க, ஒரு சிட்டிகை மஞ்சள் போதும். மஞ்சள் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இது வலியைக் குறைக்கும். உள்ளங்கையில் ஒரு சிட்டிகை மஞ்சள், சிறிது உப்பு மற்றும் கடுகு எண்ணெய் எடுக்கவும். இப்போது வலி உள்ள இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இது வலியைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

10 /11

பல் வலியைக் குறைக்கும் உப்பு இல்லாத உணவே இல்லை. ஆனால், பல்வலிக்கு உப்பு மருந்தாக வேண்டுமானால், வெந்நீரில் உப்பை கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். அதேபோல, கடுகு எண்ணெயை ஒரு சிட்டிகை உப்புடன் கலந்துக் கொண்டு, பற்களில் தடவி நன்கு மசாஜ் செய்தால் பல்வலி குறையும் 

11 /11

பொறுப்பு துறப்பு: உங்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ள இந்த செய்தி,வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் அமைந்தது.  இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை