தீபாவளிக்கு முன்னர் இந்த 5 பங்குகளில் முதலீடு செய்து சரவெடி லாபம் காணுங்கள்

Diwali stock shopping: இந்திய பங்குச் சந்தை கடந்த ஒரு வருடத்தில் சாதனை உச்சத்தை அடைந்துள்ளது. சென்செக்ஸ் 61,000-ஐ தாண்டி உள்ளது. நிஃப்டி 18,500 என்ற அளவைத் தாண்டியது. சந்தையின் இந்த ஏற்றத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்த பல பங்குகள் உள்ளன.

இதுதவிர, வரவிருக்கும் நாட்களின் நல்ல லாபத்தை அளிக்கக்கூடிய பங்குகளும் பல உள்ளன. பல்வேறு தரகு நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் வரும் நாட்களில் நல்ல லாபத்தை அளிக்கக்கூடிய பங்குகளில் சிலவற்றைப் பற்றி இந்த பதிவில் குறுப்பிட்டுள்ளோம். இந்த பங்குகளின் மூலம் 28 சதவிகிதம் வரை கூடுதல் வருமானம் பெற முடியும்.

1 /5

புரோக்கரேஜ் ஹவுஸ் மோதிலால் ஓஸ்வால், இந்துஸ்தான் யூனிலீவரில் ரூ .3200 என்ற இலக்குடன் முதலீடு செய்ய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்த பங்கின் தற்போதைய விலை ரூ .2,481 ஆகும். இதன் அடிப்படையில், ஒவ்வொரு பங்கிலும் ரூ. 719 அதாவது 28.98 சதவிகிதம் லாபம் கிடைக்கும். (படம்: ராய்ட்டர்ஸ்)

2 /5

புரோக்கரேஜ் ஹவுஸ் மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஆயுள் காப்பீடு பங்கில், ரூ . 780 என்ற இலக்குடன் முதலீடு செய்ய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்த பங்கின் தற்போதைய விலை ரூ. 631 ஆகும். இதன் அடிப்படையில், ஒவ்வொரு பங்கிலும் ரூ. 149 அதாவது 23.6 சதவிகிதம் லாபம் கிடைக்கும். (Image: Representational) 

3 /5

L&T டெக்னாலஜியில் மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் ரூ. 5,670 என்ற இலக்குடன் முதலீடு செய்ய ஆலோசனை வழங்கியுள்ளது. தற்போதைய விலையான ரூ .4,960 இல், ஒரு பங்கிற்கு ரூ .710 அதாவது 14.3 சதவிகித லாபம் கிடைக்கும். ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனமும் L&T டெக்னாலஜியில் ரூ .5790 என்ற இலக்கில் வாங்கும் ஆலோசனையை வழங்கியுள்ளது. இந்த இலக்கில், முதலீட்டாளர்கள் தற்போதைய விலையை விட சுமார் 16 சதவிகித லாபத்தை காணலாம். (Image: Representational)

4 /5

மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் ACC இல் 2,692 என்ற இலக்குடன் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தற்போதைய விலை ரூ .2,263 என்ற அடிப்படையில், ஒரு பங்கிற்கு ரூ. 429 அல்லது 18.95 சதவீத லாபம் கிடைக்கும். (Image: Representational)

5 /5

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸுக்கு தரகு நிறுவனம் மோதிலால் ஓஸ்வால் 970 என்ற இலக்குடன் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தற்போதைய ரூ.800 என்ற விலையில், ஒரு பங்கிற்கு ரூ .170 அதாவது 21 சதவீதம் லாபம் கிடைக்கும். தரகு நிறுவனமான ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் ரூ .950 இலக்கு விலையில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வாங்க ஆலோசனை வழங்கியுள்ளது. (Image: Representational)

You May Like

Sponsored by Taboola