இதுவரை வெளியாகி உள்ள சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்!

ரொமான்டிக், காமெடி என பல வகைகளில் படங்கள் வெளியாகிறது, இதில் நன்கு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சத்துடன் வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளது. 

 

1 /5

விஷ்ணு நடிப்பில் வெளியான 'ராட்சசன்' எனும் திரில்லர் படம் எந்த காலத்திலும் பார்க்க ஏற்ற தரமான படம்.  டீனேஜ் பெண்களை தொடர்ந்து கொள்ளும் ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் போராடுவது தான் இப்படத்தின் கதை.  

2 /5

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் சிறப்பான அனுபவத்தை தரும்.  புராணங்களில் வரும் விக்ரமாதித்யா மற்றும் வேதாளம் கதாபாத்திரங்களின் அடிப்படையில் ஒரு கொடூரமான வில்லனை பற்றியும், நல்ல போலீஸ் அதிகாரி பற்றியும் இப்படத்தின் கதை விவரிக்கிறது.  

3 /5

நிகில் சித்தார்த்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ஒரு ஆக்ஷன்-சாகச திரைப்படம் தான் 'கார்த்திகேயா'.  ஒரு இளம் மருத்துவர் ஒரு கிராமத்தில் நடக்கும் மர்மமான மரணங்களை ஆராய்ச்சி செய்து என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை இப்படம் விவரிக்கிறது.  

4 /5

மோகன்லால், ப்ரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான அரசியல் கதைக்களம் கொண்ட படம் தான் 'லூசிஃபர்'.  ஒரு அரசியல்வாதி மரணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தில் பதவிக்காக நடைபெறும் போட்டியை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  

5 /5

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'வேட்டையாடு விளையாடு' படம் இன்றுவரை பல தமிழ் ரசிங்கர்களின் ஃபேவரைட்டான படமாக உள்ளது.  பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரர்களை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை இப்படம் விவரிக்கிறது.