மருமகள்கள் ஏன் தனிக்குடுத்தனம் போகிறார்கள் தெரியுமா? - மாமியார்களின் 5 பெரிய தவறுகள்

புதிதாக திருமணமாகி வரும் புது மருமகள்கள் அதிகமாக தனிக்குடித்தனம் போவதற்கு மாமியார் வீட்டில் செய்யும் இந்த 5 முக்கிய விஷயங்கள்தான் காரணமாக அமைகின்றன. அவற்றை இங்கு விரிவாக காணலாம். 

  • Sep 10, 2024, 18:43 PM IST

மாமியார் - மருமகள் பிரச்னை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் புது புது வடிவத்தை பெறும். எனவே, அதில் இருதரப்பும் கவனம் செலுத்தினால் மட்டுமே பிரச்னையை தீர்க்க இயலும்.

1 /8

தற்போதெல்லாம் திருமண பேச்சை எடுத்தாலே பல பெண்கள் தனிக்குடித்தனத்தை பற்றிதான் பேசுகிறார்கள். சிலர் மட்டுமே மாமனார், மாமியார் உடன் வசிப்பதற்கு ஏற்றுக்கொள்கிறார்கள்.   

2 /8

அப்படியிருக்க, திருமணமான பின் மருமகள்கள் அதிகமாக தனிக்குடித்தனம் போக முடிவெடுப்பதற்கு புகுந்த வீட்டில் சிலர் செய்யும் இந்த 5 விஷயங்கள்தான் முக்கிய காரணம் ஆகும்.   

3 /8

முதலில் புகுந்த வீட்டில் மருமகளை அந்நியப்படுத்தும்படி நடந்துகொள்வதுதான் பெரிய தவறு. வீட்டு விஷயங்களை மறைப்பது, பொய் சொல்வது, மருமகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை இதில் கூறலாம்   

4 /8

அதேபோல், எப்போதும் மருமகள் என்ன செய்கிறாள், வேலை செய்கிறாளா, படுத்து தூங்குகிறாளா, மொபைல்  பார்க்கிறாளா என நோட்டம்விட்டுக் கொண்டே இருப்பது பெரிய தவறு. அவருக்கு என்ற தனியுரிமையை தடை செய்யக்கூடாது.   

5 /8

அதேநேரத்தில், மருமகளை தனிமையில் இருக்க வைக்கக்கூடாது. கோயில், பொது இடங்களுக்குச் செல்லும்போது மருமகளை மட்டும் விட்டுவிட்டு தனியே குடும்பத்துடன் செல்வதோ, சொல்லாமல் செல்வதோ பெரிய தவறாகும். இதன்மூலம் அன்பும், பாசமும் தடைப்பட்டுவிடும்.   

6 /8

அதேபோல், பக்கத்து வீட்டு பெண், தனது மற்ற மருமகள்கள், உறவினர் வீட்டு பெண்கள் ஆகியோருடன் உங்களின் மருமகளை ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிடுங்கள். யாரையும் யாருடனும் ஒப்பிடுவது சரியாகாது. அது மனவேதனையை உண்டாக்கும்.   

7 /8

மருமகள் அணியும் உடை, மேக்அப் உள்ளிட்டவை குறித்து விமர்சிப்பதும் தவறுதான். ஒவ்வொருதரின் விருப்பத்திற்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். மற்றவர்களின் விருப்பங்களுக்கு தடையாக இருப்பதை விட கொடுமை வேறு ஏதுமில்லை.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.