மீம் போட்டு மோதிய சிஎஸ்கே - பஞ்சாப் அட்மின்கள்... நச்சுனு பதிலடி கொடுத்த சென்னை!

IPL 2024 PBKS vs CSK Meme: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் அணியை சிஎஸ்கே 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரு அணிகளின் சமூக வலைதள அட்மின்களும் போட்டியின்போது போட்ட மீம் சண்டையை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.

மே 1ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் அணி வென்றதால், அந்த அணியின் அட்மின் தமிழ் மீம் டெம்ப்லேட்கள் மூலம் சிஎஸ்கே அணியை கலாய்த்து மீம் போட்டிருந்தார். அதற்கு சிஎஸ்கே அட்மின் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

1 /8

முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தபோது பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 60 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின், ருதுராஜ், தூபே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்றானது. ராகுல் சஹார் அடுத்தடுத்து விக்கெட்டு எடுத்தார். அதற்கு இந்த மீமை பஞ்சாப் கிங்ஸ் அட்மின் பதிவிட்டார்.   

2 /8

இன்று பஞ்சாப் அணி சிஎஸ்கேவின் 9 விக்கெட்டுகளை எடுத்து 167 ரன்களிலேயே சுருட்டியது. அதில் ராகுல் சஹார் சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக 4 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்காக இந்த மீமை பஞ்சாப் அட்மின் பதிவிட்டார்.   

3 /8

பஞ்சாப் அணி பேட்டிங்கின்போது, துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோவ், ரூசோ ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்தன. அதற்காக இந்த மீமை பஞ்சாப் அணி அட்மின் பதிவிட்டார். 

4 /8

ஷஷாங்க் சிங் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்த நிலையில், அவரும் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க கோபி - சுதாகரின் டெம்ப்லேட்டில் பஞ்சாப் கிங்ஸ் அட்மின் இந்த மீமை பதிவிட்டார்.  

5 /8

பிரப்சிம்ரன், ஜித்தேஷ், சாம் கரன், அஷுடோஷ் ஷர்மா என பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சோகத்தில் பஞ்சாப் கிங்ஸ் அட்மின் இந்த மீமை பதிவட்டார்.   

6 /8

தோல்விக்கு பின் தலைவா பட விஜய் டெம்ப்லேட்டை வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி மீம் பதிவிட்டது.   

7 /8

அதேபோல் கடந்த போட்டியில் சிஎஸ்கேவை வீழத்திய போது, 'Done And Dusted' என மாஸ்டர் பட விஜய் சேதுபதி டெம்ப்லேட்டை வைத்து மீம் போட்டியிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பஞ்சாபை தோற்கடித்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி பட டெம்ப்லேட்டை வைத்து 'Cool' என மீம் போட்டுள்ளது.   

8 /8

தொடர்ந்து சிஎஸ்கே அணியின் அட்மின் அடுத்து மீம் போடும்போது சந்திப்போம் என கைக்கொடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தொடர்ந்து சமுக வலைதளங்களிலும் சிஎஸ்கே ரசிகர்கள் பஞ்சாப் கிங்ஸ் அட்மினுக்கு மீம் போட்டு கேலி செய்து வருகின்றனர்.