வங்கி ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்: டிஏ உயர்வால் அதிகரிக்கும் ஊதியம்... விரைவில் 5 வேலை நாட்கள்?

Bank Employees DA Hike: வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. 

Bank Employees DA Hike: வங்கி ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. நாட்டின் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களுக்கும் மே, ஜூன் மற்றும் ஜூலை 2024க்கான அகவிலைப்படி 15.97% ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுள்ளது. மற்றொரு முக்கியமான நல்ல செய்தியும் உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது 0.24 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், பல இடங்களில் இந்திய வங்கிகள் சங்கத்தை (ஐபிஏ) மேற்கோள் காட்டி, அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதை நிபுணர்கள் தவறான தகவல் என தெரிவித்துள்ளனர். 0.24 சதவீதம் மட்டுமே உயர்வு ஏற்பட்டுள்ளது. 

2 /8

அகவிலைப்படி உயர்வு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. 12வது இருதரப்பு ஒப்பந்தத்தின் 13வது பிரிவின்படி, பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு (மே, ஜூன் மற்றும் ஜூலை) உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று IBA தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு அகவிலைப்படி விகிதங்கள் மீண்டும் திருத்தப்படும். இதனுடன், வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு குறித்த அப்டேட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

3 /8

அகவிலைப்படி உயர்வுக்கான காரணத்தை விளக்கிய IBA, மார்ச் 2024 இல் முடிவடைந்த காலாண்டிற்கான தொழில்துறை தொழிலாளர்களுக்கான (அடிப்படை 2016=100) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடுக்கான (CPI) தரவுகளை அளித்தது. ஜனவரி 2024க்கு: 138.9; பிப்ரவரி 2024க்கு: 139.2; மார்ச் 2024க்கு: 138.9

4 /8

ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான சராசரி CPI 139 ஆகும். இது முந்தைய காலாண்டின் சராசரியான 123.03ஐ விட அதிகம். இவற்றில் 15.97 (139-123.03) புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. அதேசமயம் கடந்த காலாண்டின் சராசரி CPI 138.76 ஆக இருந்தது.

5 /8

வாய்ஸ் ஆஃப் பேங்கிங் நிறுவனர் அஸ்வினி ராணா, அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிப்பு என்ற பேச்சு முற்றிலும் தவறானது என்று கூறினார். இது 0.24 சதவீதம்தான் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். கடந்த காலாண்டில், CPI இன் இந்த வேறுபாடு 15.73 சதவீதமாக இருந்தது, இது இப்போது 15.97 சதவீதமாக மாறியுள்ளது. எனவே வேறுபாடு 0.24 (15.97-15.73) சதவீதம். எனவே டிஏ அதிகரிப்பு 0.24 சதவீதம்தான், 4 சதவீதம் அல்ல என்பதையும் அவர் விளக்கினார்.

6 /8

வாரத்தின் 7 நாட்களில், அனைத்து வாரங்களிலும் 5 வேலை நாட்கள், 2 விடுமுறை நாட்கள் என வங்கி ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஞாயிறு தவிர அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐபிஏ மற்றும் வங்கி ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இது குறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த முடிவும் வரவில்லை. அரசிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன்தான் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படும்.

7 /8

பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 17 சதவீதம் உயரும். இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் அமைப்புகள் மார்ச் 8, வெள்ளிக்கிழமை அன்று 17 சதவீத வருடாந்திர சம்பள உயர்வுக்கு ஒப்புக்கொண்டன. 

8 /8

நவம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வரும் இந்த முடிவால் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் சுமை ஏற்படும். வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆண்டு சம்பளத்தை IBA திருத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.