ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் பேட் செய்து குறைந்த ரன்களை அடித்து, அதனை எதிரணிகளை அடிக்கவிடமால் வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள் குறித்து இதில் காணலாம்.
நடப்பு தொடரில் பெரும்பாலான அணிகள் ரன்களை குவிப்பதில் சிரமப்படுகின்றனர்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது அமெரிக்க மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றில் 20 அணிகள் மோதுகின்றன.
வழக்கமாக டி 20 போட்டிகள் என்றாலே ரன் மழை குவியும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் பேட்டர்கள் ரன் எடுக்க திணறுகின்றனர். யாராலும் 150 ரன்களை கூட எளிதாக அடிக்க முடியவில்லை.
அந்த வகையில், இந்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் பேட் செய்து குறைந்த ரன்களை அடித்து, அதனை எதிரணிகளை அடிக்கவிடமால் வெற்றிகரமாக டிபெண்ட் செய்த டாப் 5 அணிகள் குறித்து விரிவாக காணலாம்.
2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் வெறும் 127 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து அணி, அதில் இந்திய அணியை தோற்கடித்தது. இது இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறது.
அதே 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்து, மேற்கு இந்திய தீவுகளை அதனை அடிக்கவிடாமல் தோற்கடித்தது. இந்த பட்டியலில் இது 4ஆவது இடத்தை பிடிக்கிறது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் 120 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, அதில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இது இந்த பட்டியலில் 3ஆவது இடத்தை பிடிக்கிறது.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி 120 ரன்களை மட்டும் இலக்காக நிர்ணயித்து, அதில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இது இந்த பட்டியில் 2ஆவது இடத்தை பிடிக்கிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 10) நடைபெற்ற போட்டியில் 114 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா, அதில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. இது இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது.