Saturn Transit: வேத ஜோதிடத்தின்படி, ஒன்பது கிரகங்களில் சனி கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவானின் ராசி மாற்றமும், நிலை மாற்றமும், அவரது இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை வருடங்கள் ஆகும். சனி பகவான் ராசி சக்கிரத்தை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.
சனிபகவானின் தீய பார்வை இருக்கும் ராசிக்காரர்கள் அசுபமான பலன்களை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு மலை போல் சங்கடங்கள் வருகின்றன. பல தீமைகள் ஒரே நேரத்தில் அவர்களை சூழ்ந்துகொள்கின்றன. ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் பலரை பாடாய் படுத்துகிறது. இதன் தாக்கத்தால் மக்கள் பல வித இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்து நாட்காட்டியின் படி, 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி முதல் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையில், அதாவது வழக்கமான நிலைக்கு எதிரான நிலையில் உள்ளார். 23 அக்டோபர் 2022 அன்று தனது இயல்பான நிலைக்கு மாறுவார். ஜனவரி 17, 2023 வரை சனி பகவான் மகர ராசியில் இருப்பார். அதன் பிறகு கும்ப ராசியில் நுழைகிறார். அன்றைய தினத்தில் சனி மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு மாறுவார். சனி கும்ப ராசிக்குள் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
17 ஜனவரி 2023 அன்று சனி ராசியை மாற்றுவார். சனியின் இந்த பெயர்ச்சியால், துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுதலை பெறுவார்கள். மறுபுறம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் துலாம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் அசுப பலன்களில் இருந்து விடுதலை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.