அரசின் இந்த நடவடிக்கையால் 23 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நன்மை: விவரம் இதோ

Good News for Pensioners: பாதுகாப்புத் துறையில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய முறையை எளிமையாக்கும் முயற்சியில், மத்திய அரசு மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை (EPPO) டிஜி லாக்கருடன் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை, பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி, ஓய்வூதியம் பெறும் செயல்முறையை எளிதாக்க, அலகாபாத்தின் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் (PCDA) ஓய்வூதிய அமைப்பால் உருவாக்கப்பட்ட மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை (PCDA) டிஜி லாக்கருடன் ஒருங்கிணைத்துள்ளதாக கூறியது. 

1 /4

மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை டிஜி லாக்கருடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அம்சத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்த ஓய்வூதியதாரர்கள் சமீபத்திய PPO நகலை டிஜி லாக்கர் செயலியிலிருந்து (Digi Locker App) நேரடியாகப் பெற முடியும்.

2 /4

PPO இன் அனைத்து பதிவுகளும் டிஜி லாக்கரில் நிரந்தரமாக சேமிக்கப்படும். மேலும், இப்போது ஓய்வூதியம் பெறுவோர் ஃபிசிக்கல் நகலைப் பெறுவதற்கு அலுவலகத்திற்கு வரவேண்டியது இல்லை. புதிய ஓய்வூதியதாரர்களுக்கு PPO ஐ அடைவதில் ஏற்படும் தாமதங்களையும் இந்த முடிவு களைந்துவிடும்.  

3 /4

பிசிடிஏ (ஓய்வூதியம்), அலகாபாத், 23 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு டிஜி லாக்கர் தளத்தின் மூலம் ஈபிபிஓக்களை வழங்குவதற்காக சேவை வழங்குநராக பட்டியலிடப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் EPPO பதிவுகளை எங்கிருந்து வேண்டுமானாலும் அணுக முடியும்

4 /4

இதற்கிடையில், மத்திய அமைச்சரவை RPF/RPSF பணியாளர்களைத் தவிர, தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் 2020-21 நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) க்கு ஒப்புதல் அளித்துள்ளது.