CSK vs SRH: உனத்கட் போட்ட அந்த ஒரு ஓவர்... திணறிய ருத்ராஜ் - தூபே... இந்த ஸ்கோர் போதுமா?

CSK vs SRH First Innings Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

அதிகபட்சமாக சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களையும், மிட்செல் 52 ரன்களையும் அடித்தனர். 

 

1 /7

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசியது. சிஎஸ்கே அணி தனது பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.   

2 /7

அதன்படி, சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் - ரஹானே ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். ரஹானே இந்த போட்டியிலும் சொதப்பினார். 12 பந்துகளில் 9 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க உள்ளே வந்த மிட்செல், கேப்டன் ருதுராஜ் உடன் சேர்ந்து ரன்களை குவித்தார். பவர்பிளேவில் சிஎஸ்கே 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை எடுத்தது.   

3 /7

ருதுராஜ் கெய்க்வாட் - டேரில் மிட்செல் ஜோடி சிறப்பாக விளையாடி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ருதுராஜ் அரைசதம் கடந்த நிலையில், டேரில் மிட்செல் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 52 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிவம் தூபே களமிறங்கினார்.   

4 /7

தூபேவும், கெய்க்வாட்டும் மிடில் ஓவர்களில் ரன் வேகத்தை அதிகப்படுத்தினர். 14, 15, 16 ஓவர்களில் முறைய 11, 14, 11 ரன்கள் 36 ரன்களை வேகமாக குவிக்க, நடராஜன் வீசிய 17வது ஓவரிலும் 17 ரன்களை அடித்து மிரட்டினர். பாட் கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரில் 16 ரன்கள் குவிக்கப்பட்டது.   

5 /7

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக உனத்கட் வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இது மிகப்பெரிய பின்னடைவை சிஎஸ்கேவுக்கு ஏற்படுத்தலாம். 20வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.   

6 /7

கடைசி ஓவரில் களமிறங்கிய தல தோனி மூன்றாவது பந்தில் பவுண்டரியும், நான்காவது பந்தில் சிங்கிளும் அடித்தார். 5வது பந்தில் தூபே சிக்ஸர் அடிக்க கடைசி பந்தில் 1 ரன்னே கிடைத்தது. இதனால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. தூபே 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.   

7 /7

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சார்பில் நடராஜன், புவனேஷ்வர், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். அனைவரின் எகானமியும் குறைந்தபட்சம் 9.50 ஆக இருந்தது. பாட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 49 ரன்களை கொடுத்து அதிகபட்ச எகானமியை வைத்திருந்தார்.