பிக் பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 50 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த பிக் பாஸ் வீடு தற்போது பொம்மை டாஸ்கின் மூலம் அடிதடி சண்டைகளுக்கு மாறி உள்ளது. பொம்மை டாஸ்கின் போது ராணவிற்கும் சௌந்தர்யாக்கும் இடையே வார்த்தை போர் அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் சௌந்தர்யா அதிகமாக கோபமாக இருந்தார்.
ராணவிற்கும் ஜாக்லீனுக்கும் இடையே வெடித்த வார்த்தை போரில் சௌந்தர்யாவும் இணைந்து ராணாவிற்கு எதிராக பேசினார். அப்போது தலைவிரி கோலமாக அதீத கோபத்தில் சவுந்தர்யா இருந்தார்.
ஒரு கட்டத்தில் ராணவ்வை சௌந்தர்யா அடித்து விடுவாரோ என்று பார்வையாளர்கள் கருதினர். அப்போது ரயான் சௌந்தர்யாவை ராணவிடமிருந்து விலகி கூட்டிச் சென்றார். ஆனால் அந்த சமயத்தில் சௌந்தர்யாவை ரயான் தொட்டு இழுத்த இடம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் ரயான் செய்த இந்த செயல் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் ரயானுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் வாரத்தில் விஜய் சேதுபதி இது குறித்து ரயானிடம் விசாரணை செய்வாரா? ரெட் கார்டு கொடுக்கப்படுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.