Bigg Boss Tamil: உனக்காக நான் இருப்பேன்! அர்ச்சனாவிற்கு சப்போர்ட் செய்த மாயா!

Title Winnter Archana: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பைனலில் அர்ச்சனா டைட்டிலை வென்றுள்ளார்.  அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

1 /5

இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக உள்ளே சென்ற அர்ச்சனா கோப்பையை வென்று அசத்தி உள்ளார்.  

2 /5

பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனாவிற்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.  மணி இரண்டாம் இடம் பிடிக்க, மாயா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.  

3 /5

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவை பிடிக்காது என்று கூறி இருந்த மாயா, தற்போது அர்ச்சனாவிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.  "அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நீ நினைத்ததுபோல உன் வாழ்க்கையில் பூ பூக்கும் , செடி வாடுவதாக தெரிந்தால் என்னை கூப்பிடு, நான் வந்து தண்ணி ஊத்துறேன்" என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.    

4 /5

இதே போல் சக போட்டியாளர்கள் ஜோவிகா, விக்ரம், பூர்ணிமா, அக்ஷயா, நிக்சன், விஜய், விச்சு மற்றும் அனன்யா ஆகியோரை டேக் செய்து "நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் பலன்" என்று குறிப்பிட்டுள்ளார்.   

5 /5

முன்னதாக 'பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்துவிட்டது' என்ற பதிவை ஷேர் செய்து இருந்தார் மாயா.  அது சர்ச்சையை கிளப்ப தற்போது இப்படி பதிவிட்டுள்ளார்.