உடல் வலியா? உடனே விடுபட எளிய 5 வீட்டு வைத்தியங்கள்!

உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அது மரணத்தை விட கொடியதான ஒரு உணர்வை ஏற்படுத்தி உடலையும், மனதையும் சோர்வடைய செய்து விடுகிறது.

 

1 /5

அடுத்ததாக மசாஜ் செய்வது தசைகளை லேசாக்கி உடலுக்கு இதமளிக்கிறது, இதன் மூலம் உடல் வலிகளும் நீங்கும்.  கடுகு எண்ணையை இளம் சூட்டில் வைத்து வலியுள்ள இடத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்தால் வலியிலிருந்து விடுபடலாம்.  

2 /5

உப்பு நீர் தசைகளை தளர்வடைய செய்து வலியை நீக்குகிறது.  அதனால் சூடான நீரில் 1 கப் உப்பை சேர்த்து உடலின் எந்த பாகத்தில் வலி இருக்கிறதோ அந்த பாகத்தை 15-20 நிமிடங்கள் அந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.  அல்லது ஒரு துண்டை உப்பு நீரில் நனைத்து எடுத்து வலியுள்ள இடத்தில் வைத்து கொள்ளலாம்.

3 /5

சூடாக ஒத்தடம் கொடுப்பது தசைகளை தளர்த்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இது காயத்தால் ஏற்படும் வலியையும் சரி செய்கிறது.  வலியுள்ள இடத்தில் ஹீட்டிங் பேட் அல்லது சுடு தண்ணீரில் நனைத்த துணியை வைத்தும் ஒத்தடம் கொடுக்கலாம்.  

4 /5

வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதில் ஐஸ்கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.  சில ஐஸ்கட்டிகளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து வலியுள்ள இடத்தில் சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும், நீண்ட நேரம் அப்படியே ஒரே இடத்தில் வைக்காமல் எடுத்து எடுத்து வைக்கவும், இதே போல ஒரு நாளைக்கு இரண்டு தடவை செய்யலாம்.  

5 /5

இஞ்சியில் ஆன்டி-இன்ப்ளமேட்டரி நிறைந்துள்ளது, மேலும் இஞ்சி சிறந்த வலி நிவாரணியாக கருதப்படுகிறது.  வலியிலிருந்து விடுபட இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி கொள்ளவும் பின்னர் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து பருகினால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.