2022-ல் நீங்க தொட்டதெல்லாம் பொன்னாகும்: நீங்களும் இந்த ராசியா?

Horoscope 2022: 2021 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. புத்தாண்டு அதாவது 2022 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் அனைவருக்கும் உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் மாற்றம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றுவது அனைத்து ராசிகளிலும் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. 

ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன், அதாவது குருவுக்கு தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், இது தெய்வங்களின் குரு என்றும் அழைக்கப்படுகிறது. 
குரு பகவான் தனது ராசியை மாற்றும் போது, ​​அந்த நிகழ்வு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கபப்டுகின்றது. ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டில், ஏப்ரல் 12 ஆம் தேதி, குரு,  தனது சொந்த ராசிக்குள் பிரவேசிக்கப் போகின்றது. 2022-ல் குருவின் பெயர்ச்சியால், 4 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல விளைவுகள் ஏற்படும். 

 

1 /4

குரு தன் இடத்தை மாற்றுவதன் தாக்கம் கன்னி ராசியில் இருக்கும். புத்தாண்டு பிறந்து, ஆண்டின் நடுப்பகுதியில் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். இதனால் பொருளாதார நிலை வெகுவாக மேம்படும். மேலும், முதலீட்டின் மூலம் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். நிலம் மற்றும் சொத்துக்களால் பல பொருளாதார நன்மைகளும் ஏற்படும்.   

2 /4

குருவின் ராசி மாற்றம் விருச்சிக ராசியினருக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த மாற்றத்தின் தாக்கத்தால், வாழ்க்கை அற்புதமாகவும் அமோகமாகவும் இருக்கும். பணம் சம்பாதிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். 2022 வேலை முன்னேற்றத்திற்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். பல நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். இது தவிர, பொருளாதார பலன்களும் மிக அதிகமாக இருக்கும். வங்கி இருப்பும் அதிகரிக்கும்.  

3 /4

புத்தாண்டில் குரு பகவான் மீன ராசியில் செல்வது, தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். 2021 ஆம் ஆண்டின் பொருளாதார சவால்கள் முடிவுக்கு வரும். இது தவிர, நிதி நிலைமையை மேம்படுத்தி லாபத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து, வீடு ஆகியவற்றில் முதலீடு செய்வது லாபம் தரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.  

4 /4

கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி மாற்றத்தால் 2022 ஆம் ஆண்டில் விரும்பிய வேலை கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இது தவிர, வேலையில் பதவி உயர்வு மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஆகியவை கிடைப்பதற்கான வலுவான யோகமும் உள்ளது. திருமணத்திற்கு தகுதியானவர்களுக்கு திருமணம் நடக்கும். பொருளாதாரத்தில் எந்த வித நெருக்கடியும் இருக்காது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)