தீபாவளி பண்டிகை வருவதால் பலரது வீடுகளிலும் இனிப்பு பதார்த்தங்கள் நிரம்பி வழியும், அதனை நீரிழிவு நோயாளிகள் எப்படி சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இனிப்பு பண்டங்களை சாப்பிடும்பொழுது அவர்கள் உடலில் சேரும் கூடுதல் கலோரிகள் பற்றிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இனிப்பு பண்டங்களை சாப்பிடுவதற்கு முன் எதை சாப்பிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு அவசியம். எல்லா இனிப்பு பண்டங்களையும் சாப்பிடுவதை தவிர்த்து, சுவைக்காக ஒரு சிறிய துண்டு மட்டுமே எடுத்து சாப்பிடுவது நல்லது.
இனிப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என்கிற ஆசையை நீங்கள் முதலில் தள்ளிவைக்க வேண்டும், ஒரே நாளில் அதை செய்துவிட முடியாது தான், இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நுகர்வுகளை கைவிட வேண்டும்.
கச்சோரியுடன் இனிப்புகளை சேர்த்து சாப்பிட வேண்டாம் என்று நீரிழிவு நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.