மழையில் வெள்ளத்தில் உங்கள் கார் சிக்கினால் இன்சூரன்ஸ் பெற முடியுமா?

தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதில் கார்கள் பிரச்சனையில் சிக்கினால் இன்சூரன்ஸ் பெற முடியுமா என்று பார்ப்போம்.

 

1 /6

மழை வெள்ளத்தால் கார்களின் பாகங்கள், கட்டிடங்கள் இடிந்து சேதம், வெள்ளத்தில் அடித்து செல்லுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அனைத்து கார்களுக்கும் இன்சூரன்ஸ் இருக்கும் என்றாலும் வெள்ள பாதிப்புகளுக்கு உதவுமா என்று பார்ப்போம்.   

2 /6

உங்கள் கார்களுக்கு நீங்கள் என்ன மாதிரியான இன்சூரன்ஸ் எடுத்துள்ளீர்கள் என்பதை பொறுத்து வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்கும். எனவே இன்சூரன்ஸ் எடுக்கும் முன்பு இதனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.   

3 /6

விரிவான கார் இன்சூரன்ஸ் எடுப்பதன் மூலம் வெள்ள பாதிப்பு, சூறாவளி பாதிப்பு, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களில் உங்கள் கார் சிக்கி கொண்டால் இழப்பீடு பெறலாம்.   

4 /6

வெள்ள பாதிப்பில் உங்கள் கார் சிக்கினால் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம். எனவே ஒரு விரிவான இன்சூரன்ஸ் பாலிசி உங்களை கணிசமாகக் காப்பாற்றும்.   

5 /6

மேலும் தீயால் பாதிப்பு, திருட்டு போன்ற சம்பவங்கள் நேர்ந்தாலும் இன்சூரன்ஸ் கவரேஜ் உங்களுக்கு உதவும். அதேபோல உங்களிடம் விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால் வெள்ள பாதிப்பிலும் உதவும்.   

6 /6

விரிவான கார் இன்சூரன்ஸ் எடுப்பதன் மூலம் என்ஜின் பாதுகாப்பு முதல் ஒவ்வொரு கார் சார்ந்த பொருட்களுக்கும் கவரேஜை மேம்படுத்தலாம்.