IPL 2021: விராட் கோலி செய்யக்கூடிய ஐந்து முக்கிய சாதனைகளின் பட்டியல்

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இன்னும் சிலபல மணி நேரமே எஞ்சியிருக்கும் நிலையில் அனைவரின் கவனமும் சாதனைகள் மற்றும் வெற்றிகளின் பக்கம் திரும்பியிருக்கிற்து.

எதிர்வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் கேப்டன் விராட் கோலி முறியடிக்கக்கூடிய ஐந்து முக்கிய சாதனைகள் என்ன தெரியுமா?  

1 /5

விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் 10,000 ரன் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறவிருக்கிறார்   (Photograph:AFP)

2 /5

இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி சாதனை படைப்பார். (Photograph:AFP)

3 /5

விராட் கோஹ்லி டி 20 லீக்கில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரராக மாறவிருக்கிறார். ஆர்.சி.பி கேப்டன் இதுவரை 192 போட்டிகளில் விளையாடி 5878 ரன்கள் எடுத்துள்ளார். (Photograph:AFP)

4 /5

முன்னாள் ஆர்.சி.பி அணியின் கிறிஸ் கெய்ல் மட்டுமே ஐ.பி.எல் போட்டியில் விராட்டை விட அதிக ஐ.பி.எல் சதங்களை (6) அடித்துள்ளார். தற்போதைய சீசனில் இந்திய கேப்டன் கிறிஸ் கெய்லின் சாதனையை சமப்படுத்துவார் அல்லது 1 அவரையும் விஞ்சலாம்.    (Photograph:AFP)

5 /5

விராட் 61 இன்னிங்ஸ்களில் தொடக்க ஆட்டக்காரராக 2345 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு போட்டிகளில், ஆர்.சி.பி கேப்டன் ஒரு தொடக்க வீரராக 2500 ரன்களை எடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏற்கனவே 3 வது இடத்தில் பேட்டிங் செய்யும் போது, ​​86 இன்னிங்ஸ்களில் 2696 ரன்களை குவித்திருக்கிறார் பேட்ஸ்மேன் விராட். தற்போது தொடக்க ஆட்டக்காரராக இந்த சாதனையை செய்தால் இரண்டு வெவ்வேறு நிலைகளில் 2500+ ஐபிஎல் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் விராட். (Photograph:AFP)