Intermittent Fasting: எலோன் மஸ்க்கின் எடை 9 கிலோவுக்கு மேல் குறைந்ததற்கு காரணம் இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் என்று அவர் தெரிவித்துள்ளார்....
தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா? எடை இழப்பு இலக்குகளை அடைய உதவும் இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் டயட்டிங் முறையால் உடல் இளைத்த பிரபலங்கள் இவர்கள்...
ஒருவர் ஒல்லியாக இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றாலும், ஆரோக்கியத்திற்காக எடையை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. உடல் எடையை குறைக்க விரும்பும் அதே சமயத்தில் பிடித்த உணவுகளை கைவிட விரும்பவில்லையா? விரும்பியதைச் சாப்பிடுவதற்கு சுதந்திரம் அளித்து எந்தவித உணவு கட்டுப்பாட்டையும் கொடுக்காத இண்டெர்மிடெண்ட் ஃபாஸ்டிங் முறையில், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே, சாப்பிட வேண்டும். உதாரணமாக காலை 8 மணி முதல் மதியம் நான்கு மணி வரை உணவு சாப்பிடலாம். அதன் பிறகு எதுவுமே சாப்பிடக்கூடாது. இந்த வழியில் குறிப்பிடத்தக்க எடை இழப்பை அடைந்த சில பிரபலங்கள் இவர்கள்...
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் மூலம் 20 பவுண்டுகள் (9.07 கிலோ) இழந்ததாக சமீபத்தில் தெரிவித்தார்.
ஹாலிவுட் நட்சத்திரம் ஹக் ஜேக்மேன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே சாப்பிடும் இண்டர்மிடென்ட் முறையை பின்பற்றி கட்டுக்கோப்பான உடலை பெற்றுள்ளார்
53 வயதிலும் ஜெனிபர் லோபஸ் எப்படி இருக்கிறார் என்று யோசிக்கிறீர்களா? இதற்கு காரணம் இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் தான். நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே சாப்பிடும் டயட்டிங் இது.
ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனும் இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் டயட்டிங் முறையை பின்பற்றுகிறார்
அமேசானின் அதிரடி-சாகசத் தொடரான 'தி டெர்மினல் லிஸ்ட்' இல் நேவி சீல் வடிவத்தை பெற கிறிஸ் பிராட் இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங்கை மேற்கொண்டார்