SBI Debit Cards Annual Maintainance Charges : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்! டெபிட் கார்டுகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐ டெபிட் கார்டுதாரர்களுக்கு, வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்படுகிறது
டெபிட் கார்டுகளின் வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்களில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.
புதிய கட்டணங்கள் 01 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும் என வங்கி தெரிவித்துள்ளது. கிளாசிக் / சில்வர் / குளோபல் / டெபிட் கார்டுகள். ரூ.125/ +ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 200/ + ஜிஎஸ்டி வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்
யுவா/தங்கம்/காம்போ டெபிட் கார்டு/இமேஜ் கார்டு ரூ.175/ + ஜிஎஸ்டி என்பதில் இருந்து ரூ. 250/+ ஜிஎஸ்டி என வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் அதிகரிக்கும்
பிளாட்டினம் டெபிட் கார்டு கட்டணம் ரூ. 250/ +ஜிஎஸ்டி என்பதில் இருந்து ரூ. 325/+ ஜிஎஸ்டி ஆக அதிகரிக்கும்
பிரைடு / பிரீமியம் வணிக டெபிட் கார்டு ரூ.350/ +GST என்பதில் இருந்து ரூ. 425/+ ஜிஎஸ்டி ஆக கட்டணம் அதிகரிக்கும்