அட்டகாசமான வட்டி விகிதத்தில் கடன் பெற வேண்டுமா? வங்கிகளின் லிஸ்ட் இதோ

Home Loan Interest Rates of Various Banks: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இந்த தருணத்தில் பல வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களிடையே மலிவான வட்டி விகிதங்களில் வீட்டு கடன்களை வழங்க ஒரு பெரிய போட்டி உள்ளது. இந்த போட்டியால் வாடிக்கையாளர்ளுக்கு நன்மையே கிடைக்கிறது.

பல வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர சிறப்பு சலுகைகளை கொண்டு வருகின்றன. இந்த ஆண்டின் பண்டிகை காலம் இப்போது தொடங்க உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

1 /5

வங்கி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை (Rate Of Interest) 6.70% ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் செயலாக்க கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் என வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஊதியம் பெறாத (Non Salaried) வாடிக்கையாளர்களுக்கு வட்டி பிரீமியத்தில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.

2 /5

தனியார் வங்கியான எச்டிஎப்சி-யும் இந்த பண்டிகைக் காலத்தில் வீட்டுக் கடன்களை மலிவாக வழங்க முடிவு செய்துள்ளது. வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.7% ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் சில தள்ளுபடியும் வழங்கப்படும். 

3 /5

அரசு வங்கிகளில், இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடனில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 6.85%-8.00% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும். இதனுடன் 22 முதல் 25 ஆயிரம் ரூபாய் இஎம்ஐ-யில் 20 ஆயிரம் செயலாக்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

4 /5

ஆக்சிஸ் வங்கியின் வட்டி விகிதம் 6.90% -8.40% ஆக உள்ளது. 23 முதல் 25 ஆயிரம் இஎம்ஐ மீது அதிகபட்சமாக ரூ .10,000 செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும். 

5 /5

பேங்க் ஆஃப் பரோடாவின் வட்டி விகிதம் 6.75%-8.60% ஆகும். இந்த வங்கியில் 22 முதல் 26 ஆயிரம் வரையிலான தொகையின் இஎம்ஐ-யில்  அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

You May Like

Sponsored by Taboola