Cholesterol Control Tips: இன்றைய காலகட்டத்தில் அதிக கொலஸ்ட்ரால் ஒரு தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. இதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
Cholesterol Control Tips: பிஸியான மற்றும் உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக நரம்புகள் மற்றும் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கின்றது. ஆனால் இது தவிர, இன்னும் பல பழக்கவழக்கங்களாலும் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இதயம், கல்லீரல், இரத்த அழுத்தம் வரை அனைத்தையும் பாதிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் நரம்புகளை சுருங்கச் செய்து, இதயத்திற்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால், இதயத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகின்றது. கெட்ட கொலஸ்ட்ராலை (Bad Cholesterol) தவிர்க்க நாம் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் உடலில் பல வித சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் இதயம் தொடர்பான பல பிரச்சனைகளும் அடங்கும். கொலஸ்ட்ரால் என்பது ஒரு கொழுப்புப் பொருளாகும். இது தமனிகளில் படிந்து அதன் அளவு அதிகரித்தால், தமனிகளில் அடைப்பு ஏற்படலாம். இது அதிகரித்தால், உடலில் இரத்த ஓட்டம் நிறுத்தக்கூடும். இதனால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
நமது உடல் நமக்கு தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. தவறான உணவுப் பழக்கத்தால் உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது ஆபத்தாகிவிடும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. இதன் விளைவாக, இரத்த நாளங்களில் இரத்தம் அடைக்கப்பட்டு, இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக கொலஸ்ட்ரால் தவிர்க்க வேண்டுமானால், நிறைவுற்ற கொழுப்பை தவிர்க்க வேண்டும். பாலாடைக்கட்டி, கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், பால், பால் கொண்டு செய்யப்பட்ட இனிப்புகள், பாமாயில் போன்ற எண்ணெய்கள் போன்றவற்றில் நிறைவுற்ற கொழுப்பு காணப்படுகின்றது. நிறைவுற்ற கொழுப்பு உள்ள உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சோடியம் (உப்பு) மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள உணவுகளை எப்போதும் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் கடல் உணவு, குறைந்த கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் தயிர், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும்.
புகைபிடித்தல் உடலின் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. மேலும், ஒருவர் எத்தனை அதிகமாக புகைபிடிக்கிறாரோ, எத்தனை அதிகமாக சோடாக்கள், அதிக இனிப்புள்ள பானங்களை குடிக்கிறாரோ, அத்தனை வேகமாக இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. இந்த பழக்கங்காளை குறைப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
அதிகப்படியான மதுபானம், கொலஸ்ட்ரால் அளவையும், ட்ரைகிளிசரைடுகளையும், ஒரு வகை இரத்தக் கொழுப்பை அதிகரிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதை தவிர்க்க, மது அருந்துவதை தவிர்க்கவும்.
அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.