தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும் - எக்கச்சக்க நன்மைகள்

Lemon For Weight Loss: தினமும் 1 எலுமிச்சம் பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், உடல் எடை குறைப்புக்கு எந்தளவிற்கு உதவும் என்பதையும் இங்கு காணலாம்.

எலுமிச்சம் பழத்தை நீங்கள் பல்வேறு முறைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வீட்டிலேயே லெமன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வது கூடுதல் சிறப்பு எனலாம்.

 
1 /8

எலுமிச்சம் பழத்தில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். வளர்சிதை மாற்றம் அதிகமானால் உடல் தானாகவே அதிக காலோரிகளை எரிக்கும் திறனை பெரும். இதன்மூலம் விரைவாக உடல் எடையை நீங்கள் குறைக்கலாம்.   

2 /8

எலுமிச்சம் பழம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். எனவே, உங்களுக்கு சர்க்கரை கலந்த நொறுக்குத்தீனிகள் மீதான மோகம், அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற வேட்கை இல்லாமல் போகும். கூடவே, நீங்கள் தண்ணீரில் செய்யும் லெமன் ஜூஸில் சர்க்கரை கலக்காமல் அருந்த முயற்சியுங்கள்.   

3 /8

எலுமிச்சை ஜூஸ் என்பது உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் பானங்களில் ஒன்றாகும். இதை நீங்கள் நாள் முழுக்க கூட குடிக்கலாம், இதனால் ஆற்றலும் அதிகம் கிடைக்கும். அதுமட்டுமின்றி உடல் நீர்ச்சத்துடன் இருக்கும். உடலை நீரேற்றமாக வைத்திருந்தால் வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது, பசியும் கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை குறைக்க இது உதவியாக இருக்கும்.   

4 /8

கல்லீரல் என்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ஒரு உறுப்பாகும். இந்த எலுமிச்சம் பழம் அந்த கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எலுமிச்சம் பழ சாறை நீருடன் கலந்து குடித்தால் கல்லீரல் இயக்கம் சீராக இருக்கும். இதனால் உடலில் உள்ள நச்சுக்களும் தடையில்லாமல் வெளியேறும்.   

5 /8

உங்களுக்கு அடிக்கடி பசியெடுத்து நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா... இதற்கான தீர்வும் எலுமிச்சம் பழத்தில் இருக்கிறது. இதில் பெக்டின் ஃபைபர் உங்களின் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும். எலுமிச்சம் பழம் சார்ந்த உணவுகளை உண்ட பின்னர் இந்த ஃபைபர் உங்களின் பசியை கட்டுப்படுத்தி, தேவையில்லாமல் நொறுக்குத் தீனியை சாப்பிடும் எண்ணத்தை தூண்டாமல் தடுக்கும்.   

6 /8

உடல் எடை குறைப்புக்கு மிக முக்கியமான விஷயமே ஆரோக்கியமான செரிமான அமைப்பை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். அந்த செரிமானத்திற்கு எலுமிச்சம் பழம் பேரூதவியாக இருக்கும்.   

7 /8

எலுமிச்சம் பழம் குறைந்த கலோரிகளை கொண்டது. அதே நேரத்தில் அதிக வைட்டமிண்கள் மற்றும் மினரல்களை கொண்டதாகும். அதாவது 100 கிராம் லெமனில் 29 கலோரிகள் வரைதான் இருக்கும். வைட்டமிண் சி 53 மில்லிகிராம் இருக்கும். உங்களின் உடலுக்கு தினந்தோறும் தேவைப்படும் பொட்டாஸியம் அளவில் 88 சதவீதத்தை இது பூர்த்தி செய்யும். அதாவது, 138 மில்லிகிராம் பொட்டாஸியம் இருக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் முறையான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.