முன்பொரு காலத்தில் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோயாக கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான். 42-50 அல்லது 40-க்கும் குறைவான மனிதர்களுக்கே தற்போது அதிக அளவில் மாரடைப்பு வருகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. உயிர்கொல்லி நோயாக கருதப்படும் மாரடைப்பு நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.
பழங்கள் நிறைய சாப்பிடுவதால் அதிலிருந்து உடலுக்கு வைட்டமின் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. இதன் காரணமாக, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வது குறையும். பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். குறிப்பாக ஆண்கள் தினசரி பழங்கள் சாப்பிடலாம். இதனால் இருதய நோய் வராமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
2010 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மிக குறைந்த அளவு பழங்களை உண்டதால் 1.8 மில்லியன் மக்கள் இருதய நோய் காரணமாக இறக்க நேர்ந்திருக்கிறது. காய்கறிகளை உட்கொள்ளும் அளவு குறைந்ததால் ஒரு மில்லியன் மக்கள் இறந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தினமும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உடல் சீராக இயங்குவதற்கு எல்லா ஊட்டச்சத்துக்களையும் நமக்கு அளிக்கும் என கூறப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சமமாய் உட்கொள்வதால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவை சமமாய் உட்கொள்ள வேண்டும் என்றால் தினசரி பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவு சாப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.