நீடூழி வாழ எத்தனை விதமான ஆயுஷ் ஹோமங்கள்! யாருக்கு எந்த ஹோமம் செய்யலாம்?

Types Of Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று வீட்டில் யாகம் வளர்த்தி செய்யும் ஆயுஷ் ஹோமம் ஆகும்.

ஆயுஷ் ஹோமம் என்பது, ஒருவரின் தமிழ் பிறந்தநாள் நட்சத்திரத்தன்று செய்யும் யாகம் ஆகும். பொதுவாக ஒரு குழந்தை பிறந்த முதலாண்டில்  ஆயுஷ் ஹோமம் செய்வார்கள். முதலாண்டு நிறைவு முதல் 120 வயது வரை ஹோமங்கள் செய்யலாம்!  

1 /8

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என்று சொல்வார்கள். ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரது வாழ்க்கையில் 12 சாந்திகள் செய்து கொள்ளலாம். அதில் முதலாவதாக வருவது குழந்தைக்கு ஒரு வயது முடியும்போது செய்யும் ஆயுஷ் ஹோமம்

2 /8

55 வயது ஆரம்பமாகும் போது பீமசாந்தி என்றால், 60 வயது ஆரம்பம் ஆகும் போது உக்ரசாந்தி. 

3 /8

61 வயது ஆரம்பமாகும் போது சஷ்டியப்த பூர்த்தி சாந்தி, 70 வயது ஆரம்பமாகும் போது பீமரத சாந்தி

4 /8

72 வயது ஆரம்பமாகும் போது  ரத சாந்தி 

5 /8

78 வயது ஆரம்பமாகும் போது வினய சாந்தி

6 /8

80 வயது 8 மாதம் அல்லது 81 வயது முடிந்த பின் செய்வது சதாபிஷேகம் என்றால், 85 வருஷம் முதல் 90 வயதுக்குள் செய்வது ம்ருத்யுஞ்சய சாந்தி  

7 /8

100 வயது பூர்த்தியான பிறகு செய்யும் சாந்தி பூர்ணாபிஷேகம்

8 /8

120 வயது பூர்த்தியான பிறகு செய்யும் சாந்தி பௌஷ்டிகம்