பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் அனைத்து பழங்களிலும் வெவ்வேறு அளவு சர்க்கரை உள்ளது. எனவே நீரழிவு நோயாளிகள் சில பழங்களை சாப்பிட வேண்டாம்.
தினசரி உணவில் பழங்களை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.
ஆனால் சர்க்கரை நோயாளிகள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த பழங்களே அவர்களே ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்க கூடும்.
முலாம்பழம், வாழைப்பழம் மற்றும் அன்னாசி போன்ற பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
இது தவிர கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள திராட்சை, மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்களையும் தவிர்க்க வேண்டும்.
உணவில் பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக அளவு சர்க்கரை இல்லாத பழங்களை நீரழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளலாம். இது சர்க்கரை அளவை பாதிக்காது.
சர்க்கரை இல்லாத பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் முழு பழங்களையும் உட்கொள்வது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும்.