Loki Rocked..Fans Shocked! காதல் மன்னனாக மாறிய லோகியை வைத்து வைரலாகும் மீம்ஸ்!

Lokesh Kanagaraj Troll Memes: லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘இனிமேல்’ பாடலின் டீசர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Lokesh Kanagaraj Troll Memes: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இனிமேல் என்ற பாடலின் மூலமாக நடிகராக  மாறியிருக்கிறார். இந்த பாடலில் அவருடன் சேர்ந்து நடிகையும் கமல் ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். இப்பாடலுக்கு கமல் ஹாசன் வரிகளை எழுத, ஸ்ருதி ஹாசன் இசையமைத்திருக்கிறார். இதன் டீசர் நேற்று வெளியானதை ஒட்டி, லோகேஷ் கனகராஜ் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறார். இவர் குறித்து வைரலாகும் மீம்ஸ்களை இங்கு பார்ப்போம். 

1 /7

இதுவரை இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது ‘இனிமேல்’ பாடல் டீசரின் மூலமாக நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் குறித்த மீம்ஸ்கள் நேற்றிலிருந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

2 /7

லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்தவர், காயத்ரி. இவர், பகத் பாசிலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், பாதி படத்திலேயே இவரது தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவார். இதையடுத்து, லோகேஷின் இனிமேல் டீசரை பார்த்த காயத்ரி, இந்த ரியாக்‌ஷனை கொடுத்திருக்கிறார். 

3 /7

ரசிகர்கள், ‘என்ன சிம்ரன் இதெல்லாம்..’ என லோகேஷ் கனகராஜை பார்த்து கேட்டு வருகின்றனர். 

4 /7

லோகேஷின் சண்டை படங்களை விரும்பி பார்ப்பவர்கள் இந்த ரியாக்‌ஷனை கொடுப்பதாக மீம் பதிவிடப்பட்டுள்ளது. 

5 /7

லோகேஷ் கனகராஜின் நடிப்பை நக்கலாக பாராட்டும் வகையில் உள்ள மீம் இது 

6 /7

லோகேஷ், தனது படங்களில் காதல் காட்சிகள் எழுத வராது என கூறிவிட்டு, இப்படி காதலில் பின்னியெடுக்கிறாரே என்ற ஆதங்கத்தில் பதிவிடப்பட்ட மீம் 

7 /7

காயத்ரியின் ரியாக்‌ஷனாக வைரலாகும் பதிவு..