மது குடிப்பது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படியிருக்கும் சூழலில், ஒருவர் மது குடித்துவிட்டு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்தும், அதனை ஏன் மது குடித்திருக்கும் போது தவிர்க்க வேண்டும் என்பதையும் இதில் காணலாம்.
மது உடல்நலனுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். அந்த சூழலில், இந்த உணவுகளையும் நீங்கள் உட்கொண்டால் உடலில் பிரச்னைகள் அதிகமாக வாய்ப்புள்ளது.
காபி, எனர்ஜி பானங்கள், கேஃப்பீன்கள் அதிகம் இருக்கும் உணவுகளை குடித்திருக்கும் போது சாப்பிடாதீர்கள். இதனால் வயிற்றுக்கோளாறு ஏற்படலாம்.
மது குடித்திருக்கும் போது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் இருக்கும் உணவுகளையும், சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுகளையும் தவிருங்கள். இது செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் வயிறு சார்ந்த பிரச்னை வரலாம், தலைவலி வரவும் வாய்ப்புள்ளது.
மது குடித்திருக்கும் போது மிகுந்த காரமான உணவுகளை தவிர்த்து வருகிறது. இது மதுவுடன் கலந்தால் வயிற்றில் சூட்டை அதிகமாக்கி, செரிமானத்தை சிக்கலாக்கும்.
சோடா மற்றும் கார்ப்பனேடட் குடிபானங்களை மது குடித்திருக்கம்போது தவிர்த்துவிடுங்கள். இதனால் மது உங்களின் ரத்த ஓட்டத்தில் அதிகம் கலந்துவிடும். இது இன்னும் உடல்நிலை பிரச்னையை அதிகமாக்கும்.
பச்சையான மீன்களையும், கடல் உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள். இதனால் ஃபுட் பாய்சன் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இனிப்புகளையும் தவிர்த்துவிடுங்கள். இது உங்களின் ரத்த சர்க்கரை அளவை எகிறவைத்துவிடும். இதனால், தலைவலி மற்றும் வாந்தி வரவும் வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரிக் பழங்கள், உணவுகளையும் மது குடித்திருக்கும்போது தவிர்த்துவிடுங்கள். இது வயிற்று பிரச்னையை உண்டாக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதுகுறித்து மருத்துவ ஆலோசனை பெறுவதும் நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.