Five Milk Products Bad For Heart Health: இதய ஆரோக்கியத்திற்கு பல விஷயங்களை கடைபிடிக்க வேண்டும், அதேபோல் சில பழக்கவழக்கங்களையும் கைவிட வேண்டும். இந்நிலையில், இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும் இந்த ஐந்து பால் சார்ந்த பொருள்களை தெரிந்துகொள்ளுங்கள்.
பால் உடலுக்கு நல்லது என்றாலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் படும் சில பொருள்கள் உடல்நலனுக்கு தீங்குவிளைவிக்கக் கூடியதாகும். எனவே, அதன்மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
தினமும் உங்களின் சாப்பாட்டில் பால், தயிர், மோர் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதில் கால்சியம், பொட்டாஸியம், வைட்டமிண் D போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
அதேபோல், அனைத்து அனைத்து பால் சார்ந்த பொருள்களும் நல்லது என நம்பக்கூடாது. சில பால் சார்ந்த பொருள்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமிருக்கும். இது கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, இதய நோய் தாக்கும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே, இந்த 5 பால்சாரந்த பொருள்களிடம் இருந்து தள்ளியே இருங்கள்.
இனிப்பால் அழுத்தப்பட்டால் பால் (Sweet Condensed Milk): இந்த வகை பாலில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கும். இது உடல் எடையை அதிகரிக்கச் செய்து இதய நோய் அபாயத்தை அதிகமாக்கும்.
பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி (Processed Cheese): இதில் அதிகளவு சோடியமும், நிறைவுற்ற கொழுப்பும் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடானது.
சுவையூட்டப்பட்ட யோகர்ட் (Flavoured Yoghurt): இது மிகவும் சுவை மிகுந்தது என்றாலும் இதில் சர்க்கரை அதிகமாக கலந்திருப்பார்கள். இது உடல் எடையை அதிகரிக்கச் செய்து இதயத்தை நோய்க்கான அபாயத்தை ஏற்படுத்தும்.
அதிக கொழுப்புள்ள பால் (Full-Fat Milk): பால், கிரீம், அதிக கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, வெண்ணை ஆகியவற்றில் அதிகளவில் நிறைவுற்ற கொழுப்பு இருக்கும். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி, இதயத்தை பாதிப்படையச் செய்யும்
ஐஸ்கிரீம்: இதிலும் அதிக கலோரிகள், அதிக சர்க்கரை, அதிக நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் ஐஸ்கிரீம் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி பொதுவான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.