டீயுடன் ஒருபோதும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!

பலருக்கும் டீ விருப்பமான ஒன்றாக உள்ளது. காலை மற்றும் மாலையில் டீ குடித்தால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் டீயுடன் சில உணவுகளை எடுத்துகொள்ள கூடாது.

1 /7

காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் பலருக்கும் அன்றைய தினம் தொடங்கும். இப்படி பலருக்கும் விருப்பமான பானமாக டீ உள்ளது.

2 /7

டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாது. சில உணவுகள் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். 

3 /7

ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாது. இவை டீயின் சுவையை மாற்றும்.

4 /7

டீயுடன் சாக்லேட் சேர்த்து சாப்பிட கூடாது. சாக்லேட்டில் உள்ள இனிப்பு தன்மை டீயின் சுவையை கெடுக்கும். டீ மற்றும் சாக்லேட் இரண்டிலும் காஃபின் உள்ளதால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

5 /7

டீயுடன் ஒருபோதும் காரணமாக உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. இந்த கலவையானது சிலருக்கு வயிற்று எரிச்சலையும் ஏற்படுத்தும்.

6 /7

சீஸ் சேர்த்த உணவுகளை டீயுடன் சேர்த்து குடிக்க கூடாது. இவை வயிற்றில் பிரச்சனைகளை உண்டு செய்யும் மற்றும் டீயின் சுவையை மாற்றும்.

7 /7

எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளுடன் டீயை குடிக்க வேண்டாம். வறுத்த உணவுகள் டீயின் சுவையை முழுமையாக மாற்றுகிறது.