Dev Uthani Ekadashi: விஷ்ணு பகவானுக்கு உகந்த தேவதானி ஏகாதேசி நாளை (நவ. 12) கொண்டாடப்படும் வேளையில், இதில் இந்த நான்கு பரிகாரங்களை செய்தால் திருமண உறவு பலப்படும் என நம்பப்படுகிறது.
விஷ்ணு பகவான் (Lord Vishnu) மற்றும் லட்சுமியின் அருளை பெற்றால் திருமண உறவு பலமாகு என நம்பப்படுகிறது. அந்த வகையில், தேவதானி ஏகாதேசி விஷ்ணு பகவானுக்கு உகந்த நாளாகும்.
தேவதானி ஏகாதேசி (Dev Uthani Ekadashi) இந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு பகவானை வழிபடுவது உகந்தது. இன்று மாலை 6.46 மணி முதல் நாளை மாலை 4.06 மணிவரை ஏகாதேசி ஆகும். நாளை மக்கள் விரதம் இருப்பார்கள்.
யோக நித்திரையில் இருந்து விஷ்ணு பகவான் (Lord Vishnu) இந்த நாளில் துயில் எழுவார் என நம்பப்படுகிறது. அந்த நாளில் நீங்கள் விஷ்ணு பகவானை வழிபட்டு விரதம் இருந்தால், நினைத்து எல்லாம் நடக்கும்.
அதிலும் குறிப்பாக திருமண வாழ்வில் இருக்கும் பிரச்னைக் அனைத்தும் நீங்கும். அந்த வகையில், திருமண வாழ்வில் பிரச்னைகள் நீங்க தேவதானி ஏகாதேசி அன்று செய்ய வேண்டிய 4 பரிகாரங்களை இங்கு காணலாம்.
திருமணம் நடைபெறுவதில் ஏதாவது பிரச்னை வந்தால், மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து விஷ்ணு பகவானை வழிபட்டால் தீர்வு கிடைக்கும். திருமணத்திற்காக நீண்ட ஆண்டுகளாக காத்திருப்பவர்களும் இதை செய்யலாம். மஞ்சள் பூவை வைத்து விஷ்ணுவை வழிபட்டால் நல்ல செய்தி வந்து சேரும்.
உங்கள் வீட்டுக்கு அருகில் ஆலமரம் இருந்தால் அதற்கு நாளை தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் ஊற்றும்போது விஷ்ணு பகவானுக்கு உகந்த மந்திரங்களை ஓதவும். இதை உங்கள் வாழ்வில் இருக்கும் தடைகளை நீக்கி, உங்களின் விருப்பங்களை நிறைவேற்றும்.
திருமண வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் இருக்கிறது என்றல் தேவதானி ஏகாதேசி அன்று பச்சை பாலில் கரும்புச்சாறு ஜூஸை சேர்த்து துளசி செடியில் ஊற்றவும். இது லட்சுமியின் அருளை பெற்று வரும். திருமணத்தில் மகிழ்ச்சியும் பெருகும்.
திருமண வாழ்வில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால் துளசி செடிக்கு முன் 5 நெய் விளக்குகளை ஏற்றி விஷ்ணுவை வழிபடுங்கள். இது உங்களுக்கு நன்மையை தரும். பிரச்னைகள் உடனே தீரும். கூடவே விஷ்ணு பகவானுக்கு தேங்காயையும் படைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.