யோகாவை வழக்கமாக செய்வது உடல் மற்றும் மனநலனுக்கு ஏற்றது. தொடர்ந்து யோகா செய்துவந்தால், ஆரோக்கியமான உடல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அத்துடன், கூடுதல் இணைப்பாக யோகாசனங்கள் செய்வது உடல் எடையைக் குறைக்கும்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் வழிகளில் யோகா மிகவும் முக்கியமானது. யோகாவை செய்து எடையை குறைத்து பலர் நிம்மதியாக இருக்கின்றனர். எடை இழப்புக்கு எந்த யோகாசனத்தை செய்வது என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு சிலரோ, யோகா செய்வது மட்டும் உடல் எடையை குறைக்க உதவாது என்றும் கருதுகிறார்கள்.
யோகாவுடன் சத்தான உணவுடன் இணைந்தால், உங்கள் மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் உடல் எடையும் குறையும். அதோடு, உடல் எடையை அதிகரிக்குக்ம் உணவுகளில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவுகளைத் தேடத் தொடங்குவீர்கள். ரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி எடையை குறைப்பதற்கான இரண்டு முக்கிய காரணிகளாகும்.
Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?
பரிவர்தா உத்கடசனம்: பரிவர்தா உத்கடசனா என்ற இந்த யோகாசனம் சற்று சிரமமானது, பழகிவிட்டால் சரியாகிவிடும். இந்த ஆசனத்தை வயிற்று தசைகள் இறுகும். நிணநீர் (lymphatic) மற்றும் செரிமான அமைப்புகளும் மேம்படுத்தப்படுகின்றன. இது எடை இழப்புக்கான ஒரு சிறந்த முறை.
சூர்ய நமஸ்காரம்: ஆராய்ச்சிகளின்படி, ஒரு சுற்று சூரிய நமஸ்காரம் செய்தால் சுமார் 13.90 கலோரிகள் செலவாகிறது. 12 முறை சூரிய நமஸ்காரம் செய்வது பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையாகும். நிச்சயமாக, மெதுவாகத் தொடங்கி 12 சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
திரிகோனாசனா: இந்த ஆசனத்தின் போது உடலில் ஏற்படும் முறுக்கு இயக்கம் செரிமானத்திற்கு உதவுகிறது. இது, தொப்பை மற்றும் கொழுப்பு படிவுகளை குறைக்கிறது. இந்த யோகாசனம் கால்களிலும் கைகளிலும் உள்ள தசைகளைச் வலுப்படுத்துகிறது.
தனுராசனம்: இந்த ஆசனம் தொப்பை கொழுப்பு மற்றும் இடுப்பு கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. தட்டையான வயிற்றைப்பெற சிறந்த ஆசனம் தனுராசனம் று நிறமாக இருக்கும். இது முதுகு, தொடைகள், கைகள் மற்றும் மார்பை ஒரு அற்புதமான நீட்டிப்பையும் தருகிறது.
அதோ முக ஸ்வனாசனா குறிப்பிட்ட தசைக் குழுக்களை மையமாகக் கொண்டு முழு உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கை, தொடை, தொடை எலும்பு மற்றும் முதுகுப் பகுதிகளை வலிமையாக்குகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
சேது பந்த சர்வங்கசனம்: வயிற்று கொழுப்பைக் குறைக்க சேது பந்த சர்வங்கசனம் உதவும். ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், செரிமானம் சேது சீராவதற்கும் இந்த ஆசனம் உதவி செய்யும்…