Tamil Nadu: அரசுப் பள்ளியின் வராண்டாவில் ரயில் வந்தது எப்படி?

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியின் முயற்சி வித்தியாசமாக இருக்கிறது. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துக்கிறது.

இந்த அரசுப் பள்ளியின் அனைத்து வராண்டாக்களிலும் ரயில் பெட்டிகளைக் காண முடிகிறது. எப்படி இது சாத்தியம் என்று திகைப்பாக இருக்கிறதா? கற்பனை வளம் இருந்தால் எல்லாம் சாத்தியமே...  அந்த அரசு பள்ளியில் (government school ) வராண்டாக்களில் வர்ணம் பூசப்பட்டு அவை ரயில் கோச்சுகள் (train coaches)  போல காட்சியளிக்கின்றன. வேறு எந்த பயணிகளும் இல்லாமல் ரயில் பெட்டிகளில் பயணிக்கும் அனுபவத்தை மாணவர்கள் பெறுவார்கள்.

இன்று அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற பல முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முயற்சிகள் சிறிய நிலையில் இருந்தாலும், அவை பெரிய அளவில் பயனளிப்பவை ஆகும்.

Photo Courtesy: ANI

1 /4

இந்தப் பகுதியில் இருக்கும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளே, இந்தப் பள்ளியின் மாணவர்கள். அரசுப் பள்ளியின் இந்த புதிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. 

2 /4

இந்தப் பள்ளியின் அனைத்து வராண்டாக்களையும் ரயில் பெட்டிகள் போல காட்சியளிப்பதால், அங்கு செல்லும்போது, ஒரு ரயிலுக்கு அருகில் வந்ததைப் போல உணர முடிகிறது.

3 /4

இந்த பள்ளியில் பயிலும் பல பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களில் பலர் ரயிலில் பயணம் செய்யாத மாணவர்கள். இதை மனதில் கொண்டு மாணவர்கள் ரயிலில் பயணிக்காமலேயே, ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை வழங்குவதற்காக பள்ளி நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. 

4 /4

இங்கு பணிபுரியும் பள்ளி ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: "இங்குள்ள மாணவர்கள் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகிறார்கள், ரயில்களில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்காதவர்கள்.  பள்ளிக்கு வரும் அவர்களுக்கு ரயிலின் சில பகுதிகளை அனுபவித்து கற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் பள்ளிக்கூட்த்தின் தாழ்வாரங்களில் சித்திரங்களை தீட்டினோம்."