உலர் பழங்களின் சத்து முழுமையாக கிடைக்கணுமா... ‘இப்படி’ சாப்பிடுங்க!

உலர் பழங்களின் நன்மைகளை முழுமையாக பெற எந்த உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிட வேண்டும்; எதை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

ஊறவைத்த பிறகு எந்த உலர்ந்த பழங்களை சாப்பிடுவது நல்லதா; அல்லது அப்படியே எடுத்துக் கொள்வது நல்லதா என பலருக்கு கேள்வி மனதில் எழுவதுண்டு. 

1 /7

உலர் பழங்கள் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. மூளை ஆரோக்கியம் முதல், உடல் எடை இழப்பு வரை... இதன் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

2 /7

உலர் பழங்கள் உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற எந்த உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.  

3 /7

ஊறவைத்த பிறகு எந்த உலர்ந்த பழங்களை சாப்பிடுவது நல்லதா; அல்லது அப்படியே எடுத்துக் கொள்வது நல்லதா என பலருக்கு கேள்வி மனதில் எழுவதுண்டு.  சில உலர் பழங்களை ஊறவைத்து உண்ண வேண்டும். இதனால் முழு பயன் கிடைக்கும். எனினும் சில உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிடக் கூடாது.

4 /7

அனைத்து உலர்ந்த பழங்களையும்  ஊறவைத்து சாப்பிடுவது பயனளிக்காது. ஏனென்றால் அனைத்து உலர் பழங்களையும் ஊறவைத்து சாப்பிட்டால் தான் பலன் கிடைக்கும் என்பது அவசியமில்லை. பாதாம், திராட்சை மற்றும் பிளம்ஸ் போன்ற உலர் பழங்களை ஊறவைப்பது அதிக நன்மை பயக்கும்.

5 /7

முந்திரி, வால்நட், வேர்க்கடலை, பிஸ்தா, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களை ஊற வைக்காமல் உட்கொள்ளலாம். சில உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள், குறிப்பாக அக்ரூட் பருப்புகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றை ஊறவைத்தால் இந்த சத்துக்கள் அழிக்கப்படலாம். எனவே ஊறவைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். 

6 /7

பேரீச்சம்பழத்தை ஊற வைத்து ஊற வைக்காமல் என இரண்டு வழிகளிலும் உட்கொள்ளலாம், அவற்றை ஊற வைத்தும் சாப்பிடலாம் மற்றும் உலர்ந்த வடிவத்திலும் சாப்பிடலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.