Central Government Employees HRA Hike: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவை குறித்து அரசாங்கம் ஜாக்பாட் அறிவிப்பு வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
7வது ஊதியக்குழு அப்டேட் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு அடுத்த மாதம் அகவிலைப்படியை உயர்த்த உள்ள நிலையில், தற்போது அதனுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் உயர்த்தப் போகிறது. தற்போது, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்படுகிறது. இதனிடையே கூடிய விரைவில் வீட்டு வாடகை கொடுப்பனவை அரசாங்கம் அதிகரிக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.
HRA எப்போது திருத்தப்படலாம்? விரைவில் மோடி அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்க முடியும். இதற்கான அறிவிப்பை, அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி 2023-24 நிதியாண்டின் இறுதிக்குள், அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால், அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை திருத்தம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக ஜூலை 2021 இல் திருத்தம் இதற்கிடையில் முன்னதாக கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதத்தைத் தாண்டியபோது, அப்போது ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு ஏற்பட்டது. எனவே தற்போது, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வீட்டு வாடகை கொடுப்பனவை திருத்தக்கூடும்.
HRA எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும் இந்த முறை அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை 3 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது. தற்போது, ஊழியர்களுக்கு 27 சதவீத வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது, 30 சதவீதமாக உயரும். அந்த வகையில் ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும் போது இது 30 சதவீதமாக இருக்கும் என அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தொகை எவ்வளவு அதிகரிக்கும்? 7வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 56,900 ரூபாய் ஆகும். அதன் வீட்டு வாடகை கொடுப்பனவு 27 சதவிகிதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது.
பிரிவு வாரியாக HRA எவ்வளவு ஏற்றம் இருக்கும் மெமோராண்டம் படி, அகவிலைப்படி 50 சதவீதம் தாண்டும்போது வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதமாக இருக்கும். X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு வகை இருக்கிறது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்கள் 27 சதவீதம் வீட்டு வாடகை கொடுப்பனவு பெறுகிறார்கள், இது அகவிலைப்படி 50 சதவீதமானவுடன் என்றால் 30 சதவீதமாக இருக்கும். அதே சமயம், ஒய் வகுப்பினருக்கு, 18 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு, 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.