சனி பகவான் துணை இருப்பார்... 2025 வரை ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!

ஜோதிடத்தில் சனிக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. சனி பலன்களைத் தருபவர் மற்றும் நீதியின் கடவுள். அனைத்து கிரகங்களிலும், சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. 

சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் நீடிப்பதால் மீண்டும் அதே ராசிக்கு வர 30 வருடங்கள் ஆகும். சனி தற்போது கும்பத்தில் இருக்கிறார்.

1 /7

கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான், கும்பத்தில் சனி இருக்கும் நிலையில், ஷஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.  ஜோதிடத்தில், ஷஷ ராஜயோகம் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் கணக்கிடப்படுகிறது.

2 /7

கும்ப ராசியில் சனி நீடிப்பதாலும், ஷஷ ராஜயோகத்தாலும், 2025-ம் ஆண்டு வரை,  சில ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சனிபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.  

3 /7

சனிதேவர் துலாம் ராசியில் உச்சம் பெற்றுள்ள நிலையில், துலாம் ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகம் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களின் வேலைகள் நிறைவேறும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

4 /7

விருச்சிக ராசிக்கு ஷஷ ராஜயோகம் காரணமாக நிதி நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பார்கள். நிதி ஆதாயத்திற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவார்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

5 /7

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். உங்கள் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த நல்ல உதவிகள் கிடைக்கும். வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

6 /7

ஏழரை நாட்டு சனி, சனி தோஷம், சனி தசை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் பெற, சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபாடு செய்வது மிக சிறந்தது. மேலும், ஏழை எளியவர்களுக்கு செய்யும் தானமும் தொண்டும், உதவியும், அன்ன தானமும் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.