30 நாட்களுக்குப் பிறகு கும்பத்தில் சனி உதயம், இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Shani Uday Effect 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 31 ஆம் தேதி அஸ்தமனமானார், தற்போது மார்ச் 06 ஆம் தேதி உதயமாகப் போகிறது. சனியின் உதயத்தால் பல ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 /5

சனி உதயம் விளைவு 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17 கும்ப ராசியில் சனி பகவான் பெயர்ச்சியானார். பிறகு 30 ஆம் தேதி அஸ்தமனமானார். தற்போது மார்ச் 6 ஆம் தேதி சனி மீண்டும் கும்பத்தில் உதயமாகயுள்ளார், இதனால்  சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார்.  

2 /5

ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவி உண்டாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இக்காலகட்டத்தில் வெற்றி கிட்டும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும், பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது.  

3 /5

சிம்ம ராசி: பண யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வேலையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதே சமயம் தொழிலதிபர்களும் லாபம் அடைவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும்.  

4 /5

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் பல மகிழ்ச்சிகள் வந்து சேரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனை அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.   

5 /5

கும்ப ராசி: சனி உதயத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.  

You May Like

Sponsored by Taboola