கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 எளிய உணவுகள்!

கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிப்பது இதயம் சம்மந்தமான நோய்க்கு வழிவகுக்கிறது.

 

1 /5

கொழுப்பு சத்து நிறைந்த பால் பொருட்கள் மற்றும் இறைச்சி போன்றவற்றை உண்பதை தவிர்த்து, ஒமேகா-3 நிறைந்துள்ள உணவுப்பொருட்கள், ஆளி விதைகள், வால்நட்ஸ் போன்ற நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

2 /5

குறைந்தது 1 வாரத்தில் 5 நாட்களாவது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, 20 நிமிடங்கள் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்ய வேண்டும். அப்படி செய்யமுடியாதவர்கள் தினமும் சுறுசுறுப்பாக 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.  

3 /5

புகைபிடிப்பது உடலில் கொலஸ்டராலின் அளவை அதிகரிக்கும். ஒரு 20 நிமிடங்கள் புகைபிடிக்காமல் இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி இதயம் பழைய நிலைக்கு திரும்பும், அதுவே முழுவதுமாக புகைபிடிப்பதை நிறுத்தினால் இதயத்தில் பாதிப்பும் வராது, கொலஸ்ட்ராலும் கூடாது.

4 /5

செயற்கையான இனிப்பு சுவை கொண்ட பானங்கள், அதிக உப்பு அல்லது இனிப்பு கலந்த தின்பண்டங்கள் போன்றவற்றை உண்பது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. தினமும் எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதை கவனித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.

5 /5

மிதமான அளவில் ஆல்கஹால் அருந்துவது கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆண், பெண் என இரு பாலினத்தவரும் தினமும் ஒன்று அல்லது இரண்டு வகையான ஆல்கஹால் நிறைந்த பானங்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதிகமாக மது அருந்தினால் அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.