பங்குச்சந்தையில் உங்கள் பங்கு: டீமேட் கணக்கு திறப்பது எப்படி?

New Demat Account: நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் அல்லது ஏதேனும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால், டீமேட் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். கடந்த சில ஆண்டுகளில், பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், இதில் முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. 

1 /4

பங்குச் சந்தையில் எளிதாக முதலீடு செய்ய மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் பல நிறுவனங்களும் செயலிகளும் இன்று உள்ளன. இன்றைய காலகட்டத்தில் டீமேட் கணக்கு மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த கணக்கை சாதாரண மக்களும் அதிக அளவில் திறந்து வருகின்றனர், பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.

2 /4

இந்தியாவில் முன்னர், பாரம்பரிய முறையான நிலையான வைப்புத்தொகை முறையையே மக்கள் தங்கள் சேமிப்பிற்கான சிறந்த முறையாக கருதி வந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பங்குகள் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் FD-யின் இடத்தை எடுத்துக்கொண்டுள்ளன. உங்களுக்கும் டீமேட் கணக்கை திறந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வம் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். டிமேட் கணக்கை எப்படி எளிதாகத் திறக்கலாம் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.

3 /4

Demat கணக்கு, முதலீட்டாளர்கள், மின்னணு வடிவத்தில் பங்குகள் மற்றும் முதலீட்டு பத்திரங்களை வைத்திருக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. Demat கணக்கின் நோக்கம் பங்குச் சான்றிதழ்களை (Share Certificates) மின்னணு வடிவில் மாற்றுவதாகும். முதலீட்டாளர்கள் தங்கள் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க இது உதவும்.

4 /4

எந்த வித பிரச்சனையும் இல்லாமல் Demat கணக்கை திறக்க, இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற இந்திய அரசு அங்கீகரித்த அடையாள சான்றுகள்.   வீட்டு வாடகை ஒப்பந்தம், ஓட்டுநர் உரிமம் , பாஸ்போர்ட், லேண்ட்லைன் தொலைபேசி பில், மின்சார கட்டணம், எரிவாயு பில் போன்ற முகவரி சான்று. வங்கி பாஸ்புக் அல்லது வங்கி அறிக்கை. இது உங்கள் வங்கிக் கணக்கின் சான்றாக இருக்கும். இந்த வங்கி அறிக்கை (Bank Statement) மூன்று மாதங்களுக்கு மேல் பழைய அறிக்கையாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமீபத்திய சம்பள சீட்டு அல்லது உங்கள் வருமான வரி கணக்கு. இது உங்கள் வருமானத்தின் சான்றாக இருக்கும்.