Health Tips: இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும் உணவுகள்

இரும்புச்சத்து குறைபாடு உடலில் பல நோய்களுக்கு காரணம் ஆகிறது. சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

 

1 /5

பீட்ரூட் : உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுங்கள். பீட்ரூட்டை உட்கொள்வதால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது

2 /5

பசலைக்கீரை: உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க கீரையை சாப்பிடலாம். பசலைக்கீரையில் கால்சியம், சோடியம், தாது உப்புகள், குளோரின், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதால், உடலில் உள்ள இரும்பு சத்து குறைபாட்டைக் குறைக்க உதவுகிறது.

3 /5

மாதுளை சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது. மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

4 /5

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இந்தப் பழத்தை உட்கொள்வது உடலில் இரும்புச் சத்து குறைபாட்டை சரிசெய்யும் என்று கூறப்படுகிறது.

5 /5

பச்சை காய்கறிகள்: உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க, பச்சை காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடு மட்டுமின்றி பல உடல்நலப் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.  (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE மீடியா இதற்கு பொறுபேற்காது)