Foods Which Reduces Your Stress: பலரும் மன அழுத்தத்துடன் உடல்நிலையில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததும் ஒரு பிரச்னை ஆகும். அந்த வகையில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களின் மனநிலை சீராகவும் வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த உணவுகளை தெரிந்துவைப்பதும் நல்லதாகும்.
யோகர்ட்: இதில் உள்ள புரோபயோட்டிக்ஸ் குடலுக்கு நல்லது. இது உங்களின் மனநிலையை சீராக்கும்.
பாதாம்: இதில் வைட்டமிண் இ அதிகம் உள்ளது. இந்த ஆண்டிஆக்ஸிடன்ட் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும்.
கீரைகள்: இதில் மேக்னீஸியம் அதிகம் உள்ளது. இது உங்களின் கார்டிசோல் அளவை சீராக்கி, உங்களுக்கு அமைதியான உணர்வை ஏற்படுத்தும்.
டார்க் சாக்லேட்: இதில் உள்ள ஃபிளாவனாய்டு ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும், கார்டிசோல் எனப்படும் ஸ்ட்ரஸ் ஹார்மோன்களை குறைக்கும்.
அவகாடோ: இதில் கொழுப்பும், போட்டாஸியமும் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். எனவே, மன அழுத்தத்தால் வரும் தாக்கம் குறையும்.
ஓட்ஸ்: இதில் உள்ள கார்போஹைட்ரேட் மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கும். இது உங்களை ரிலாக்ஸாக்கி, மன அழுத்தத்தை குறைக்கும்.
பொறுப்பு துறப்பு: மன அழுத்தத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்த இந்த செய்தியை படித்த வாசகர்களுக்கு நன்றி. இருப்பினும், இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.