Health Alert: ஆப்பிள் சாப்பிட்டவுடன் ‘இவற்றை’ சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையாகிவிடும். எனவே ஆப்பிள் சாப்பிட்ட பிறகு அவற்றை உட்கொள்ள வேண்டாம். அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /6

ஆப்பிள் பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைக்கும். ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். மேலும், இரத்த சோகையை உடலில் இருந்து நீக்குகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் அனைத்து நோய்களும் குணமாகும்.  

2 /6

ஆப்பிளில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் இதர சத்துக்கள் உள்ளன. ஆனால் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்  

3 /6

ஆப்பிளை சாப்பிட்ட உடனேயோ அல்லது 2 மணி நேரத்திற்குள்ளோ தயிர் சாப்பிடக்கூடாது. ஆப்பிள் மற்றும் தயிர் இரண்டும் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளன. எனவே இதனை மொத்தமாக உட்கொண்டால் சளி பிரச்சனை ஏற்படும்.

4 /6

ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றில் பாக்டீரியா, வாயுத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

5 /6

ஆப்பிள் சாப்பிட்ட பிறகு ஊறுகாய் அல்லது எலுமிச்சை சாப்பிடுவது வாயு, அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் புளிப்பு உணவுகளை சாப்பிட வேண்டாம்.

6 /6

முள்ளங்கியை கூட ஆப்பிளுடன் சாப்பிடக்கூடாது. தோல் பிரச்சினைகள், தோல் வெடிப்புகள் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம்.