எந்த வயதிலும் தலைவலி ஏற்படலாம். ஆனால் சிலருக்கு தலைவலி அதிகமாகி மைக்ரேன் தலைவலி போல் தீவிரமடையும். சில பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ரெட் ஒயின் தலைவலியைத் தூண்டும். எனவே, உங்களுக்கு ஏற்கனவே தலைவலி இருந்தால், ரெட் ஒயின் குடிப்பதைத் தவிர்க்கவும்.
சீஸ் என்னும் பாலாடைக்கட்டி அதிகம் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தலாம்.
பலர் சாக்லேட் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சாக்லேட் அதிகமாக உட்கொள்பவர்கள் தலைவலி பிரச்சனைகளை சந்திக்கலாம்.
பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள். ஆனால் சில சமயங்களில் பால் தலைவலியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு ஏற்கனவே தலைவலி இருந்தால் அதை உட்கொள்வதை தவிர்க்கவும்.
சிட்ரஸ் பழங்களை கவனமாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் சில சமயங்களில் தலைவலியை ஏற்படுத்தும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)