Saturn Retrograde: ஜூன் 17 அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார்.
ஒருவருக்கு சனி பகவானின் அருள் இருந்தால் அவர் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகள் மற்றும் இன்பங்களை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல், அவரது கோவப்பார்வை ஒருவர் மீது பட்டால் அவர் பல இன்னல்களுக்கு ஆளாவார்.
நீதியின் கடவுள்: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் ஜூன் 17 ஆம் தேதி சனி இரவு 10:48 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். அதாவது அந்த நேரத்திலிருந்து அவர் தலைகீழ் இயக்கதை தொடங்குவார். நவம்பர் 04, 2023 அன்று காலை 09:15 வரை அவர் இந்த நிலையில் இருப்பார்.
சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிம்ம ராசி: சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசியில் ஷஷ ராஜயோகம் உருவாகும். இதன் காரணமாக அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிதி நிலையும் வலுவடையும். காதல் உறவுகளில் பாசம் இருக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகர ராசி: பண வரவு அதிகமாக இருக்கும். நிலம், சொத்து சம்பந்தமான வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். லாபத்தால் குடும்பத்தில் சுபகாரியங்கள் அதிகரிக்கும். சனியின் அருளால் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
மிதுனம்: தடைபட்ட அனைத்து வேலைகளும் இப்போது முடிக்கப்படும். இந்த காலத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது. அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களின் தொழிலில் சனி பல முன்னேற்றங்களை ஏற்படுத்துவார். இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.