அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விளையாட்டு செயலி FAU-G க்கான காத்திருப்பு முடிந்தது! முன் பதிவு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வொமா?
அண்மையில், இந்தியா-சீனா எல்லை தகராறு உச்சத்தை அடைந்த பிறகு, பிரபல கொரிய செயலியான PUBG உட்பட பல appகல் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. தற்போது விளையாட்டுப் பிரியர்களுக்காக அறிமுகம் செய்யப்படுகிறது FAU-G...
PUBG க்கு எதிராக FAU-G களமிறக்கப்பட்டுள்ளது அண்மையில், இந்தியா-சீனா எல்லை தகராறு உச்சத்தை அடைந்த பிறகு, பிரபல கொரிய செயலியான PUBG உட்பட பல appகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. தற்போது விளையாட்டுப் பிரியர்களுக்காக அறிமுகம் செய்யப்படுகிறது FAU-G...
நாட்டில் தயாரிக்கப்பட்ட FAU-G இன் முழு பெயர், FAU-G: Fearless and United Guards. ஒரு போர் விளையாட்டாக இருக்கும் இது, போர்க்களத்தை சித்தரிக்கும்.
முதலில் ஆண்ட்ராய்டு பயனர்கள் விளையாட வாய்ப்பு கிடைத்த தகவல்களின்படி, FAU-G கேம்களை உருவாக்கும் டெவலப்பர்கள் முதல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக இந்த புதிய விளையாட்டை தயார் செய்கிறார்கள். இதனால்தான் விளையாட்டின் முன்பதிவு பயன்பாடு Google Play Store இல் உள்ளது. ஆப்பிள் பயனர்கள் இந்த விளையாட்டுக்காக சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்த விளையாட்டின் brand ambassidor ஆக இருக்கிறார்.
விளையாட்டு பிரியர்களுக்காக முன் பதிவு தொடங்குகிறது FAU-G விளையாட காத்திருப்பவர்களுக்காக முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோரின்(Google Play store) தேடல் பிரிவில் (search section) FAU-G: Fearless and United Guards என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்கள் மொபைல், விளையாட்டுக்கு இணக்கமாக இருந்தால், முன் பதிவுசெய்க என்ற பொத்தானைக் காண்பீர்கள். முன்பதிவு செய்ய பச்சை பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
Google Play store-இல் செயலிகளின் பெயர்கள் பட்டியலில் War Game என்ற பட்டியலில் FAU-G பல பட்டியலிடப்பட்டுள்ளது. டெலிகாம் டாக் (Telecom Talk) என்ற தொழில்நுட்ப தளத்தின்படி, புதிய விளையாட்டு FAU-G கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.