குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!

Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் இறைவனாக குறிப்பிடப்படுகிறார். குபேரனின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருந்தால், அவரது வாழ்வில் என்றும் பணம் மற்றும் செல்வத்தின் பற்றாக்குறை ஏற்படாது. 

 

Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரரின் அருள் பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களாக வாழ்கிறார்கள். குபேரர் நமக்கு செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அளிக்கிறார். 12 ராசிக்காரர்கள் மீதும் குபேரர் பாரபட்சம் காட்டாமல் அருள் புரிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் இவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்ர ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /10

இந்து சமய சாஸ்திரப்படி குபேரர் செல்வ செழிப்பிற்கான கடவுளாக கருதப்படுகிறார். வாழ்வில் பணத்தேவை ஏற்படும் போது பொதுவாக மக்கள் அன்னை லட்சுமியையும் குபேரரையும் வணங்குவது வழக்கம். குபேரரை வழங்கினால் அனைத்து விதமான செல்வங்காளும் கிடைக்கும்.

2 /10

 ஒரு மனிதனுக்கு குபேரரின் அருள் இருந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்படாது. அவர் வறுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலையே இருக்காது.

3 /10

மக்களிடம் இருக்கும் செல்வத்தை அதிகரித்து அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க குபேரர் அருள் புரிகிறார். செல்வத்தை அளிப்பதுடன் பணம் இல்லாதவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அதை அளித்து பிறருடைய இன்னல்களை போக்கி வைக்கும் நல்ல குணத்தையும் குபேரர் அருள்கிறார். 

4 /10

12 ராசிக்காரர்கள் மீதும் குபேரர் பாரபட்சம் காட்டாமல் அருள் புரிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் இவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். இவர்கள் வாழ்வில் வறுமையை காண்பதே இல்லை. இவர்கள் எப்பொழுதும் செல்வ செழிப்பில் திளைப்பார்கள். அதிக சிரமம் எடுக்காமலேயே இவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைத்துவிடும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /10

ரிஷபம்:  ரிஷப ராசி அன்னை லக்ஷ்மிக்கு பிடித்த ராசியாக கருதப்படுகின்றது. இந்த ராசிக்காரர்கள் குபேரனைத் தொடர்ந்து வழிபடுவது நிதி பலத்தை அதிகரிக்கும். லட்சுமி அன்னை மற்றும் குபேரர் என இருவரது ஆசீர்வாதமும் இருப்பதால், இவர்கள் வாழ்நாள் முழுதும் பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்கிறார்கள். குபேரர் இவர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கிறார். இவர்கள் வாழ்வில் என்றும் பணத்திற்கான பற்றாக்குறை ஏற்படாது. 

6 /10

கடகம்: கடக ராசி சந்திரனுக்கு மிகவும் பிடித்த ராசியாகும். கடக ராசிக்காரர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பணம் சம்பாதிப்பதால் குபேரர் அவர்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதோடு, தங்களிடம் உள்ள பணத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சந்திரனின் தாக்கத்தால் அவர்களுக்கு தொண்டு செய்யும் நற்குணமும் இருக்கும். குபேரர் இவர்களது இந்த குணங்களால் மகிழ்ச்சியடைந்து இவர்கள் மீது செல்வ மழை பொழிவார். 

7 /10

துலாம்: துலா ராசிக்காரர்கள் குபேரரின் செல்லப் பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் எதை செய்ய நினைத்தாலும் அதை முற்றிலுமாக வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இவர்களுடைய ஜாதகத்தில் குபேரர் சுபமான ஸ்தானத்தில் இருந்தால் இவர்கள் வாழ்வில் செல்வந்தர்களாக மாறி அவ்வாறே இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. குபேரர் அருளால் இவர்களுக்கு எப்போதும் நிதி நெருக்கடி ஏற்படுவதில்லை. குபேரர் எப்பொழுதும் துலா ராசிக்காரர்களுக்கு அருள் புரிகிறார். இவர்கள் இருக்கும் செல்வத்தை பிறருக்கு தானம் செய்து அதில் மகிழ்ச்சி காண்பார்கள். 

8 /10

தனுசு: குரு பகவான் தனுசு ராசியின் அதிபதியாக இருக்கிறார். குரு மற்றும் குபேரரின் அருளால் தனுசு ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம் மற்றும் வணிகத் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். குபேர பகவான் அவர்களின் அதிர்ஷ்டத்தை ஒளிரச்செய்து, அபரிமிதமான செல்வத்தைப் பெறச் செய்கிறார். இவர்களுக்கு அவ்வப்போது எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ரிஸ்க் எடுக்கவும், புதிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவும் அவர்கள் பயப்படுவதில்லை. குரு அருளால் இவர்களுக்கு எப்போதும் அறிவாற்றல் மற்றும் கல்வியில் நாட்டம் இருக்கும். குபேரரின் அருளால் எப்போதும் பணத்துக்கு குறைவிருக்காது. 

9 /10

குபேரரின் அருள் பெற இந்த ஸ்தோத்திரத்தை தினமும் கூறலாம்: ஓம் ஹ்ரீம் க்ளீம்செளம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.