கமல் கூட இதுவரை செய்ததில்லை! பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி செய்த செயல்!

Bigg Boss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொழிலாளர் பிரச்சனைகளை பற்றி பேச நிகழ்ச்சி முடிந்தும், மைக் மூலம் போட்டியாளர்களிடம் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

1 /6

பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் பரபரப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. பல்வேறு திருப்பங்கள், சர்ச்சைகள் மற்றும் வியத்தகு விதிகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

2 /6

கடந்த வாரம் நடந்த மேலாளர் மற்றும் தொழிலாளர் டாஸ்கில் போட்டியாளர்கள் அருண், தீபக் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதை பற்றி வார இறுதியிலும் விஜய் சேதுபதி பேசி இருந்தார்.

3 /6

எபிசோடில் அருண் பேசியது தவறு என்று சுட்டிக்காட்டிவிட்டு அடுத்த எபிசோடில் சந்திக்கலாம் என்று விடைபெற்றார் விஜய் சேதுபதி. ஆனால் அருண் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

4 /6

இதனால் பிக்பாஸ் பேசும் மைக்கில் விஜய் சேதுபதி நேரடியாக போட்டியாளர்களிடம் பேசினார். பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் ஒரு ஹோஸ்ட் இப்படி பேசுவது இதுவே முதல்முறை.

5 /6

உணர்ச்சிவசத்தில் இருந்த அருணை விஜய் சேதுபதி பேசி, இந்த பிரச்சனைக்கு தெளிவு மற்றும் ஊக்கத்தை அளித்தார். அதன் பிறகு, அருண் தனக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.  

6 /6

சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி வெளியேறியதை தொடர்ந்து போன வாரமும் இரட்டை எவிக்ஷன் நடைபெற்றது. சத்யா மற்றும் தர்ஷிகா இரண்டு பேரும் வெளியேற்றப்பட்டனர்.