முகமது அசாருதீன் சாதனையை டெஸ்டில் முறியடிக்கப்போகும் ரோகித் சர்மா..!

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா வரலாற்று சாதனையை முறியடிக்க உள்ளார். 

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 

 

1 /8

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரிலும் நடக்கிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 

2 /8

இந்த டெஸ்ட் தொடரில் வரலாறு படைக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாதனையை முறியடிக்க உள்ளார். 

3 /8

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் விராட் கோலி. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

4 /8

அதே நேரத்தில், ரோஹித் சர்மா இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையில் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

5 /8

செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றினால், அசாருதீன் சாதனையை முறியடிப்பார்.

6 /8

இந்திய அணிக்காக முகமது அசாருதீன் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். அதில் இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார். 

7 /8

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற கேப்டன்கள் வரிசையில் 40 வெற்றிகளுடன் முதல் இடத்தில் விராட் கோலி, 27 வெற்றிகளுடன் அடுத்து தோனி, மூன்றாவது இடத்தில் 21 வெற்றிகளுடன் கங்குலி உள்ளனர்.

8 /8

நான்காவது இடத்தில் 14 வெற்றிகளுடன் அசாரூதின் இருக்கும் நிலையில் அந்த இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இப்போது ரோகித் சர்மாவுக்கு இருக்கிறது.